Monday, October 10, 2022

நீங்கள் சமீபத்தில் மொபைல் எண்ணை மாற்றியவரா?

*நமது மொபைல் எண்ணை மாற்றுவதால் நமக்கு ஏற்படும் மற்றொரு இழப்பை தெரிந்து கொள்ளுங்கள்*

*நமது முகவரி/ மின்னஞ்சல்/ மொபைல் எண்ணை மாற்றுவது குறித்து நாம் கடைசியாகத் தெரிவிக்கும் நிறுவனம் எப்போதும் வங்கியாகவே இருக்கும்*

*சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்*

ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8,16,000/- காணாமல் போனது.

*இது எப்படி சரியாக நடந்தது?*
 
ஒரு பெண் தனது வங்கிக் கணக்குடன் இணைத்திருந்த மொபைல் எண்ணை நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை. ஆனால் அதை அவளது KYC இலிருந்து நீக்க வங்கிக்கு தெரிவிக்கவில்லை.

இப்போது, ​​அந்த பயன்படுத்தப்படாத மொபைல் எண் மொபைல் நிறுவனத்தால் மூடப்பட்டு மற்றொரு நபருக்கு வழங்கப்படுகிறது.

மொபைல் நிறுவன பாலிசியின்படி, எந்த எண்ணையும் 6 மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால், அதை வேறு யாருக்காவது கொடுக்கலாம்.

இப்போது புதிய எண்ணைப் பெற்றவருக்கு வங்கியின் வழக்கமான *இன்கமிங் எஸ்எம்எஸ்* வரத் தொடங்கியது.

தனது புதிய மொபைல் எண்ணுடன் ஒரு வங்கி கணக்கு இணைந்துள்ளது என்பதை அறிந்து கொண்ட அவர். அவருக்கு வந்த ஒரு இணைப்பு மூலம் வங்கியின் தளத்தை அணுகினார். மற்றும் *கடவுச்சொல்லை மறந்துவிடு* என்ற பயன்பாட்டை பயன்படுத்தினார்.

இப்போது வங்கியிலிருந்து புதிய கடவுச்சொல்லை மாற்றுவதற்கான லிங்கின் OTP அங்கீகரிப்புக்காக அவர் கைவசம் உள்ள எண்ணுக்குச் சென்றது, அவர் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, இன்டர்நெட் பேங்கிங் மூலம் அனைத்துப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் எடுத்தார்.
  
எனவே நண்பர்களே! நீங்கள் பயன்படுத்தாத அல்லது உங்கள் பழைய எண்ணை வங்கிக் கணக்கில் இணைத்திருந்தால், நீங்கள் வங்கிக்கு சென்று வங்கி விதிகளின்படி அந்த எண்ணை நீக்க வேண்டும்.

தயவு செய்து மனதில் கொள்ளுங்கள்! ஆறு மாதங்களாக உங்களால் பயன்படுத்தப்படாத மொபைல் எண்ணை மொபைல் நிறுவனங்கள் வேறொருவருக்கு மீண்டும் ஒதுக்கலாம்.

*இந்த உண்மை நம்மில் பலருக்கு புதிய தகவலாக இருக்கலாம். இது மிகவும் முக்கியமானது. கவனமாக செயல்படுங்கள்*

Sunday, October 9, 2022

இதுவும் தமிழ்மொழி வார்த்தைகள்தானா?

தென் தமிழகத்தில் தூத்துக்குடியை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்தக்கூடிய சில தமிழ் வார்த்தைகள்...

"வாசிப்பதற்கு இனிமையாக இருந்தது"

1)தெப்பாஸ்' - ஏமாளி
2)பெக்கோ - உதவாக்கரை
3)ஓமி'- கூறு  இல்லாதவன்.
4)கெப்பர் _பெருமை
5)பக்கி பயவுள - தரித்திரம் பிடிச்சவன்.

6)மக்கா -நட்பு
7)லோட்டா- டம்ளர்
8)வசி-பிளேட் 
9)சாய்ப்பு-சமையலறை
10)காடையன்- மோசமானவன்

11)பேக்லாட் - வெள்ளந்தியானவன்
12)கடைப்பம் - காலை உணவு
13)கல்சம் - கால் சட்டை short trouser
14)சொங்கி-தெம்பில்லாதவன்
15)தொம்மை புண்ணாக்கு

16)சிய்யான் - தாத்தா
17)தட்டு- மாடி
18)முடுக்கு - சந்து
19)கைகொரங்கு
20)பீர்ஸ்- சிறிய தட்டு, மீன் வைத்து சாப்பிடும் சிறிய தட்டு

21)அம்மை - அம்மாவை பெற்றவர்
22)வசி=தட்டு, 
23)அசை=கொடி,
24)சாய்ப்பு, 
25)குசினி= சமயற்கட்டு

26)வளவு=வீட்டின் பின்புறம்.
27)பொறுத்துக்கோ= மன்னிச்சுக்கோ
28)ஏக்கி=எலே என்பதற்கான பெண்பால். இன்னும் பல உண்டு.
29)வறண்டா - முன் பகுதி
30)வாரியல் -துடைப்பம்

31)தோச்சு - muththam
32)போத்தல் - bottle
33)அரங்கூடு - store room
34)பிலாப்பட்டி - small vessel
35)சாய்ப்பு kitchen

36) ராக்க - clothes hanger
37)அல்மேரா - beero
38)சொதி - soup
39)மரக்கறி - mixed vegetables
40)கல்சம்- trouser

41)கொவளை - பாத்திரம்
42)கொச்சிக்கா- மிளகாய்
43)ஆனம்- குழம்பு
44)தென்னை-jadai
45)போச்சி -bottle

46)சப்பாத்து- shoe
47)லைட்ட மூத்துரு - light off
48) லூசு ( Pekko)
49)பட பட படத்தான்..துறு துறு..
50)அலப்பற - நாக்கை தொங்க போட்டு ஆசை..

51)சோத்து மாடன் - தின்னி பண்டாரம்.
52)வங்கு- பெஞ்சு
53)லாச்சி - drawer
54)சேப்பு - pocket.
55)போணி Tin can

56)தேசிக்கா . எலுமிச்சை
57)தாச்சி
58)சார்பு- சமையலறை 
59)பிந்தி-பிறகு
60)வசி- சாப்பாட்டு தட்டு

61)சல்லி பைசா
62)பப்படம் - அப்பளம்
63)கும்பாதிரி - ஞானத்தந்தை
64)சுருவக்குண்டு - சுரூபக் கூண்டு - இறை உருவங்கள் தாங்கிய மாடம்
65)தாயாபுள்ள - உடன் பிறப்புகள்

66)உசும்புதல் - மிரளுதல்
67)பிரேகம் _ திருமண அறிக்கைவாசித்தல்
68)தெரிப்பு-tariff. 
69)தண்டோரா
70)வெல்லனய .நேரத்தோட

71)ரொட்டி-பாண் தோட்டி
72)ஊர்ப்பட்ட சாமான் ( lot of things)
73)சொங்கி (useless) - உதவாக்கரை
74)செக்கல்" என்பது நம் பரதவர்கள் பயன்படுத்தும் தூய தமிழ்ச்சொல்..இதன் அர்த்தம் அந்தி மாலைப்பொழுது
75)எத்துவாளி - ஏமாற்றுக்காரன்

76)எம்ட்டன் - ஏமாற்றுக்காரன்
77)ஊத்தை _      அழுக்குபாண்ட
78)யாத்தோய் , யாத்தே, எம்மோய்
79)கிடுகு-செத்தை
பின்னிய தென்ன ஓலை
80)வெருங் காபி- plain coffee (without milk)

81)அச்சாறு  - ஊறுகாய்
82)சம்க்காரம் - சோப்பு
83)புட்டுவம் - நாற்காலி
84)வாங்கு - மர இருக்கை
85)செத்துக்கான்...கொஞ்சம்

86)சாத்துக்கு' இருத்தல் - முதியோர் / நோயாளிகள் / பிரசவித்தோருக்குத் துணையாக குறிப்பாக இரவில் இருத்தல்.
87)வடி தண்ணி= கஞ்சித் தண்ணி
88)அல்மேரா - (Beero)
89)ஆக்கங்கட்ட கூவ
90)கல்சர

91)மேப்படியான்
92)தக்க
93)ஏக்கி
94)பழைது (பழைய சோறு)
95)திராக்கோல்-சாவி.. (Tracol - Portuguese )

96)வாங்கு - மீன் வெட்ட உட்காரும் பலகை.
97)அருவங்கூடு - ஸ்டோர் ரூம்.
98)கோப்பை. கிண்ணம்
99)ஆவ்லாதி - complaint
100)(பெரும) பீத்றது - pride

101)காப்பு - வளையல்
102)தேத்தண்ணி - Tea
103)தத்தி _ கோயில் முகப்பு
104)கெப்பரு - pride
105)தக்கடி _ கறிகொழுக்கடை
ஆட்டு தலைகறி உபயோக படுத்துவார்கள்.....

இந்த கொழுகட்டை யை கறிசொதியில் ஊறவைத்து....Yummy..

106)புருஷகாராம் -நொய் இனிப்பு
107)பூ பைனி - பத நீர்
 108)சுங்கான் - pipe smoking
109)ஏய்க்கி- ஏய் 
110தூப்பான்- துடைப்பம்

111)சொளவு....முறம்
112)சட்டாப்ப-தோசை கரண்டி
113)முட்டகூடு லாம்பு
114)பொறிக்ங சட்டி
115)கம்மர்கட்டு

116)வெர்ராம்
117)பெர்சந்தியார்
118)தத்தி
119)தப்புத்த
120)பணியம் ஆப்பம்

121)புஷ்கோட்
122)வயிருமுட்டி....தொந்தி
123)குக்கல்-இருமல்
124)நூலாம்பாசி.....சிலந்தி வலை
125)புறவாசல்

126)பெருத்தா-பெரியம்மா
127)பெரீயா-பெரியப்பா
128)பிலாப்பெட்டி
129)சர்வசட்டி
130)பான்- Bread

131)ஆணம்-குழம்பு
132)செவிட்டபேத்திருவேண்,
133)பிருத்திருவேண் - அடித்து விடுவேன் 134)கடக்கா-அங்கேஇருக்கா.
135)கெப்பர்-Style.

136)தண்டோரா
137)ஆவலாதி
138)கிராதி
139)வயித்தால-வயிற்றுபோக்கு
140)நப்பீ-கஞ்சன்

141)பிச்சுகுடு-பகிர்தல்
142)பொசுப்பொசுப்பு-முணுமுணுத்தல்
143)பம்முறான்-ஒளிகிறது
144)கிரிசிகெட்டவன்- ஒன்றுக்கும் உதவாதவன்
145)ஒப்பேராது-சரிவராது

146)கூவப் பேவுள்ள - கூகைப் பையன் பிள்ளை (வசைச் சொல்)
147)பேப் பேவுள்ள - பேய்ப் பையன் (வசைச் சொல்)
148)பிசுக்கிபிசுக்கி-எண்ணிஎண்ணி
149)பிஸ்கோத்-பிஸ்கட்
150)ஊளல்-காதில் சீழ் வடிதல்

151)தடுமல்-ஜலதோஷம்
152)கரட்டு வழக்கு-ஏடாகூடாமாக பேசுவது
153)மத்தியஸ்தம்-சமரசம்
154)மூக்குநாறி
155)ஒரேடியா

156)சவக்காரம் - சோப்பு
157)ஊத்தப் பல் - விளக்காத பற்கள்
158)மோகரகட்டை(facial expresssion)
159)புருஷகாராம்- புடித்த கரம் - கரத்தினால் பிடிக்கப்படும் அரிசி மாவு மற்றும் பதநீர் கலந்த உணவு பண்டம்.
160)பேத்தை=சிறு வயதிலேயே வயிறு பெரிதாக இருப்போரை இப்படி அழைப்போம்.

161)தெம்மாடி - கூறு கெட்ட கூவை
162)மணிக்கூடு-  கைக்கடிகாரம் 
163)லேன்ஞ்சி - கைக்குட்டை
164)கரச்சல் - பிரச்சனை, தொல்லை
165) துப்பட்டி - நமது பெண்கள் பயன்படுத்தும் போர்வை

166) ஏனம் - பாத்திரம்
167)கம்சு - ஆண்கள்  அனியும் சட்டை
168)வசவு - கெட்ட வார்த்தை
168)ஓவு வீடு = ஓடு இல்லாத  மொட்டைமாடி வீடு
169)பவுரு = தலைக்கனம், பெருமை
170)ஆப்பை = சிரட்டை மற்றும் மூங்கிலால் ஆன கரண்டி

171)கூரப்பாய் = கடலுக்கு கொண்டு போகும் பாய்
172)பாச்சோறு = பொங்கல் போன்ற இனிப்பு சோறு
173)உரி காய்த்தல் = புளியந்தோடு காய்த்தல் (பாய்க்கு ஊற்ற)
174)கொளைய சோறு = மீன் (அ) கருவாடு, கிழங்கு சேர்த்து கொளைய வைத்த சோறு (சொல்லும்போதே மணத்தை உணர முடிகிறது)
175)நீவாடு = நீரோட்டம்

176) பைய - மெதுவாக
177) நா முத்திப் போச்சு - சிறுவர்கள் பெரியவரை விட மோசமாக பேசும் போது குறிப்பிடுவது
178)தாத்துருவான்,-வள்ளத்தை கடலில் மூழ்கடிச்சிருவான்
179)தாந்துருவான் என்பது கடலில் மூழ்கிருவான்
180)ஒரப்பா பிடித்து இழு - வலுவாக இழு

181) மோந்துட்டுவா,வாத்துட்டுவா சோத்துட்டு வா -  தண்ணி  வார்த்துட்டு வா.
182)பீத்தை - பெண் பிள்ளைகள் ஜடையில் கட்டும் ரிபன்.
183)செத்கான் - கொஞ்சம் போல.
184)தெரணை - வாசலண்டை.
185)திட்டிவாசல் - பின்வாசல்.

186)மச்சி வீடு - மாடி வீடு
187)சொங்கி - சோம்பேரி.
188) கான் - சாக்கடை.
189)கொறம்பாடுறான் - முரண்டு பிடிக்கிறான்
190)ஜட்கா வண்டி - குதிரை வண்டி.

191)பொஸல் - புயல்.
192)கொசுங்கு - கொசு.
193)ரோதை - சக்கரம் (டயர்)
194)வீயம்செராமிக்ஜாடிஊறுகாய்,வினாகரி ஜாடி
195)ஒருலோஸ் - கடிகாரம்

196)பொசகெட்டவன் - 
197)பேக்கு - மடயன்.
198)பேக்லான்ட் - விவவரமில்லாதவன்.
199)கும்பா - சின்ன கோப்பை

Monday, September 19, 2022

நம்மிடமிருந்து போனது நமக்கே திரும்பி வரும் ~ கர்மா

ஒரு குட்டிக்கதை

ஒருமுறை செல்வந்தர் ஒருவரின் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. 'நான் நம்ம வீட்டு தொலைபேசியை பயன்படுத்துவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அலுவலத் தொலைபேசியைத்தான் பயன்படுத்துவேன். ஆனாலும் இவ்வளவு தொகை வந்திருக்கு. யார் இதற்கு காரணம்?' என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார் குடும்பத் த‌லைவ‌ர்.

'நானும் அலுவலகத் தொலை பேசியை மட்டுமே பயன்படுத்துகிறேன். எனக்குத் தெரியாது' என்று அவர் மனைவியும் கூறிவிட்டு, மகனிடம் கேட்குமாறு கூறினார்.  ’நான் வீட்டு தொலைபேசியைத் தொடுவதே இல்லை. எனக்கு அலுவலகம் கொடுத்திருக்கும் கைத்தொலைபேசியில்தான், நண்பர்களிடம் கூட பேசுவேன் என்றார் மகன்.

‘நாம் யாரும் பயன்படுத்தவில்லை என்றால் எப்படி இவ்வளவு கட்டணம் வந்துள்ளது’ என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த வீட்டு வேலைக்காரரோ, 'ஐயா, நானும் உங்களைப் போல் எப்போதும் நான் வேலை செய்யும் இடத்திலுள்ள என்னோட அலுவலகத் தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துகிறேன்' என்றார். குடும்ப உறுப்பினர்கள் திகைத்து நின்றனர்.

அந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்வதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.

சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்குப் புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...!