Monday, May 29, 2017

கோபமும் குரோதமும் : சிறுகதை

                            

ஒரு காட்டில் ஒரு மானும் குதிரையும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் இவை இரண்டிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
பகையும், கோபமும தோன்றி வளர்ந்தன.
பகைமை கொண்ட மான்,
குதிரையை விட்டுப் பிரிந்தது.
அதன் மீது கோபம் கொண்ட குதிரை,
அந்த மானை எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்று எண்ணியது.
ஆனால், குதிரைக்கு வழி தெரியவில்லை;
அதனால் ஒரு மனிதனின் உதவியை நாடியது.
அவனும் அதை ஏற்றுக்கொண்டான்.
அந்தக் குதிரையின் மேலேறிக்
காட்டிற்குச் சென்றான்.
அந்த மானைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டான்.
மான் இறந்ததைக் கண்டு குதிரை மகிழ்ச்சியால் கனைத்தது
அவனுக்கு நன்றி செலுத்தியது;
அவனை நோக்கி,
இப்பொழுது என்னை விட்டு இறங்கி,
என்னைக் காட்டுக்குள் அனுப்பி விடு என்று கூறியது.
அதற்கு அம் மனிதன்,
முடியாது
நீ எனக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கின்றாய்
உன்னை நான் விட முடியாது என்றான்.
அன்று முதல் குதிரை அவனுக்கு அடிமையானது.
மான் பகை கொண்டதால் அழிந்தது.
குரோதமும் கோபமும் கொண்ட குதிரை
மானைக் கொன்றதோடு
தன் சுதந்திரத்தையும் இழந்து அடிமையானது

No comments: