ஒரே ஒரு கடவுள் இருக்கிறார். அவர் கண்ணுக்குத் தெரிவதும், தெரியாததுமான அனைத்தையும் இந்த அண்ட சராசரத்தையும் (பிரபஞ்சம்), அதற்கும் மேலானவற்றை படைத்தவர்.
முதலாவது பாவ வீழ்ச்சியினால், மனிதன் கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டான். ஆகவே, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் உலகில் பிறக்கும்போது பாவத்தோடு பிறக்கின்றனர்.
*பலி கொடுத்தாச்சி !*
*விமோச்சனம் கிடைச்சாச்சி !*
கடவுள் மனிதனோடு உறவை புதுப்பிக்க, மனிதன் பவித்திரமாக (பரிசுத்தமாக) மாற்றப்படவேண்டும். அதற்கு பரிகாரம் தேவை. ஆகவே கடவுள் தன்னுடைய ஒரே மகன் இயேசுவை, இந்த உலகில் ஒரு மீட்பின் திட்டத்தோடு அனுப்பினார். இயேசுவும் இந்த உலகில் பிறந்து, மனிதகுல பாவங்கள் அனைத்தையும் தன்மேல் சுமந்து, சிலுவையில் பாவ பலியாக தன்னை ஒப்புக்கொடுத்து மரித்தார். ஆனால், மூன்றாவது நாள் அவர் மரணத்தை ஜெயித்து உயிரோடு எழும்பினார்.
*யாருக்கென்ன லாபம் ?* 🤨
கடவுள் திட்டமிட்டபடியே, இயேசுவின் மூலம் மனிதனோடு உள்ள உறவை கடவுள் புதுப்பித்துக்கொண்டார். இதை நம்பி இயேசுவை ஏற்றுக்கொள்ளும் எல்லாரும், இயேசுவின் மூலம் பாவ மன்னிப்பை இலவசமாக பெற்று, கடவுளோடு நித்தியகாலமாக வாழும் தகுதியை பெறுகின்றனர். ஆனால் இதை அறிந்த பின்னரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் போனால், தங்கள் பாவத்தினால் நித்தியகால அழிவிற்கு (நரகம்), பிசாசோடு தள்ளப்படுவர்.
நாடு, நிறம், மொழி, இனம், ஜாதி, மதம் என்ற வேற்றுமை இன்றி, எல்லோரும் மீட்கப்பட வேண்டும், சொர்க்கத்தில் (பரலோகம்) என்றென்றும் தன்னோடு வாழவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், அது உன்னையும், என்னையும் சேர்த்துத்தான்.
அன்பான இறைவன்,
பாசமாய் அழைக்கிறார்.
ஆதாரம் :
பைபிள் யோவான் 3:16
https://goo.gl/WoMhNn
அந்த ஒளி
https://goo.gl/byPVSR
ஆதியிலே . . .
https://goo.gl/o4EQr3
*பாவ விமோச்சன ஜெபம்*
அன்பான கடவுள் இயேசுவே, நான் பாவி என்பதையும், எனது சுய முயற்சியால் பாவ விமோச்சனம் பெற முடியாது என்பதையும் உணர்ந்து அறிக்கை செய்கிறேன். நீர் என் பாவ பரிகாரத்திற்காக, என்னுடைய பாவங்களை உம்மேல் சிலுவை மரணத்தில் ஏற்று, எனக்கு பாவ விமோச்சனம் கொடுத்ததை நம்பி உமக்கு நன்றி செலுத்துகிறேன். மரணத்தை ஜெயித்த மெய் தெய்வமாகிய உம்மை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் உள்ளத்தில் வாரும். என் வாழ்வை புதுப்பியும். ஆமென்.
உங்களுக்கும் விமோச்சனம் கிடைச்சிட்டா? 😄 சொல்ல விருப்பமானால் இங்கே கிளிக் பண்ணவும் https://goo.gl/5s8vdp
No comments:
Post a Comment