Sunday, December 23, 2018

தமிழனா? திராவிடனா? வடவனா?

கர்நாடக கன்னடர்களும் , ஆந்திர தெலுங்கர்களும் , கேரளா மலையாளிகளும் ஏற்காத திராவிடத்தை !

ஏன் தமிழகத்தில் இருக்கும்
கன்னடர்களும் ,  தெலுங்கர்களும் , மலையாளிகளும் திராவிடத்தை கெட்டியாக கட்டி பிடிக்க  கரணம் என்ன ? 

1  முதலில் திராவிடம் என்றால் என்ன  ?

திராவிடம் என்பது தமிழ்நாடு , கர்நாடகா,கேரளா ,ஆந்திர நிலப்பரப்பை குறிப்பது திராவிடர்கள் என்பது இந்த நிலங்களில் வாழும் மக்களை அடையாள படுத்திக்கொள்ள ஆரியர்கள் வைத்த பெயர் தான் திராவிடம் - திராவிடம் என்பது தமிழ் சொல் அல்ல சம்ஸ்கிருத சொல் நான்கு மொழி பேசும் மக்களை   திராவிடன் என்று ஆரியன் அடையாளப்படுத்தி கொண்டான் .

நாம் அனைவரும் திராவிடர்கள் என்று தமிழர்கள் எழுதிய சங்ககால இலக்கியங்கள் எதிலும் இல்லை .

திராவிடம் என்ற சொல்  சம்ஸ்கிருதத்தில் இருந்து உருவான சொல் அது தமிழ் சொல்லல்ல .

உங்களை ஆரியன் தான் திராவிடன் என்று சொல்லுவான் நாம் நம்மை தமிழர்கள் என்று தான் சொல்லவேண்டும்  தமிழ் என்பது நம் இனத்தின் அடையாளம் திராவிடன் என்பது அடையாளம் அல்ல.

12 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் - தமிழர்கள்  அனைவரும் கலப்பின மக்கள் அல்ல ஆனால் தமிழ்நாட்டை திராவிட பூமி என்ற சொல் தமிழகத்தை ஆக்கிரமித்து உள்ளது  திராவிடத்தின் தேவை தமிழர்களுக்கு எதற்கு என்ற கேள்வி தமிழ்நாட்டில் எழுகின்றது ! .

கன்னட தெலுங்கு மலையாளம் முன்று மொழிகளும் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத ஆகிய இரண்டு மொழிகளில் இருந்து உருவானவை என்பது மாற்று கருத்து கிடையாது - ஒவ்வொரு மொழிக்கும் வரலாறு உண்டு படித்து பாருங்கள் !

2. தமிழ் பெரியதா ? சமஸ்கிரத்தம் பெரியதா ?

மனுதர்ம இந்துத்துவ கோட்பாடு !  புரியும் படி சொன்னால்

மனுதர்மம் என்றால் என்ன இது படித்துதான் இந்தியா இன்றுவரை இயங்கி கொண்டிருக்கின்றது
BC MBC SC / ST என்று ஏன் மனிதனை பிரித்திருக்கின்றான் ? அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இப்படி மக்களை பிரித்து வைத்ததை பார்த்ததுண்டா ? அங்கே யாதி அடிப்படையில் எவனையும் பிரிக்கமாட்டான். ஏன் தமிழீழ மன்னில் கூட இது இல்லை  . நீ தொட்டால் தீட்டு என்று யாரையும் சொல்லமாட்டான்

ஆனால் பிழைக்க வந்த பார்ப்பனிய ஆரிய கூட்டம் திறமையாக யோசித்து இங்கு வாழ்ந்த மக்களை எளிதில் அடிமை படுத்திவிடவைக்கும் வகையில்  கட்டு கதைகளையும் வேத நூல்களையும் எழுதியது அந்த வேத நூல்களை  பார்ப்பனியத்தை தவிர  (பிராமணர்கள்) வேறு யாரும் படிக்க கூடாது அப்படி படித்தால் படிப்பவர்கள் வாயில் ஈயத்தை காய்ச்சி ஊத்தலாம் என்று எழுதி வைத்து விட்டான் பார்ப்பான் நரி மூளை.
( ஈயத்தை காய்ச்சி ஊத்தலாம் - கீழ் சாதியினர் படித்தாலும் இதுதான் நிலை -   படிப்பறிவு இல்லாத கூட்டத்திற்கு பகுத்தறிவு வராது எளிமையாக அடிமை படித்திவிடலாம் )

மக்களையும் வேத நூல்களில் இருப்பதுதான் உண்மை என அனைவரையும் நம்ப வைத்தான் - வேத நூல்கள் தெய்வத்துக்கு சமமானது என்ற தோற்றத்தை தெளிவாய் மக்களிடத்தில் கொண்டு சென்றுவிட்டான் , மக்களும் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டிருந்ததால் அதை மறுக்காமல் ஏற்று கொண்டுவிட்டனர் .
ஒரு பழமொழி உண்டு "பார்ப்பானுக்கு பன்றிக்கும் பயண செலவில்லை" என்று . ஆனால் அவன் பன்றி அல்ல - விஷவிதையை ஊரெங்கும் தூவிட்டு சென்ற நரி மூளைக் காரன் .

மக்களை பிரித்த விதம் -

பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பார்பான்,  தோளிலிருந்து பிறந்தவன் சத்ரியன், இடுப்பிலிருந்து பிறந்தவன் வைசியன், தொடையிலிருந்து பிறந்தவன் சூத்ரியன் என்று பிரித்து ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற தாழ்வு முறையில் பொறுப்பை வழங்கும்படி செய்தான்.

இதில் என்ன கொடுமையென்றால் ஆரியன் தெற்கில் இருக்கும் நம்மை தமிழர்களை அவன் பார்பது சூத்திரனாக அல்லது அதற்க்கும் கீழே.

இப்படி செய்ததால் கல்வி அறிவு தமிழர்களுக்கு முற்றிலுமாக மறுக்கபட்டது.  அனைத்து அறிவையும் பார்பான் பறித்ததுமட்டுமல்லாது அனைவரையும் அடிமையாக்கிவிட்டான். இதையே இரட்டமலை சீனீவாசன் , அயோத்தி தாஸ், பாரதியார், அம்பெத்கார் ,பெரியார்,  பார்பனிய சித்துவிளையாட்டை மக்களிடத்தில் உணர்வுபூர்வமாக கொண்டு சென்றனர்.

இதில் நாமெல்லாம் எப்படி இந்துவானோம் தெரியுமா ?

சமயம் தெய்வ வழிபாடு ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு மாதிரி நாம் தமிழர்கள் முன்னோர்களை வழிபடும் குலதெய்வ வழிபடு கொண்டவர்கள்.

இங்கே 450 மேற்பட்ட வழிபாட்டு முறைகள் உள்ளது .

நாம் முன்னோர்கள் கட்டிய கோவில்களில் அவனை (பிராமணன்) நுழைத்துக்கொள்ள அனைத்து சமயத்தையும் இந்து என்ற ஒற்றை வார்த்தைக்குள் கொண்டுவந்தான்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் பூசாரி அவன் தான்.

கருப்பசாமி கோவிலுக்குள் மட்டும் வரமுடியவில்லை,  நாம் ஆடு வெட்டுவோம்!  அது அவர்கள் செய்யமாட்டார்கள்!

Hinduism/Etymology of the words Hindu and Hinduism. The word Hindu is derived from the Sanskrit word Sindhu which is the local name for the Indus River that flows through the north-western part of the Indian subcontinent.

இந்து என்பது சமஸ்கிருத சொல் தமிழ் சொல்லல்ல! 

தமிழ் சொல்லே இல்லாத  உன்னை நான் இந்து நான் இந்து என்று பெருமையாக சொல்லும்படி செய்துவிட்டான்.

தமிழர்களாகிய நாம் சைவர்கள் இந்த சொல்லையே அகராதியில் இருந்து தூக்கிட்டான்.

இந்த இந்துதுவத்தையும் மனுதர்ம Rss கோட்பாடுகளை முன்நிருத்துவது இந்த ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து வந்த ஹிந்தியை தூக்கிபிடிப்பவர்கள்.

இந்த ஹிந்தி திணிப்பு அனைத்து ஊர்களிலும் நடந்தது தமிழகத்தில் மட்டும் நடத்தபடமுடியவில்லை காரணம் தமிழ் மொழி சமஸ்கிருதத்திற்க்கு முன்பு தோன்றிய மொழி ! அதை உணர தொடங்கியதால் ஹிந்தி ஆரியனின் ஆதிக்கம் இங்கு எடுபடவில்லை!

சமஸ்கிருதம் பெரியதா ? தமிழ் பெரியதா?

3. ஜாதிய எதிர்ப்பு !

இரட்டைமலை சீனிவாசன்

அயோத்திதாஸ் இவர்களே பெரியாரின்

முன்னோடிகள்.

பெரியார் மட்டுமே இந்த ஜாதிகளை எதிர்கவில்லை,  பெரியார் தமிழர் அல்லாத ஒருவரை முன்நிருத்தும் போதே திராவிடம் என்ற சொல் பயன்பாட்டிற்க்கு வரும் . அப்படி திராவிடம் என்ற சொல்லுக்குள்ளே தெலுங்கர்களும் மலையாளிகளும் கனடர்களும் தமிழக அரசியலுக்குள்ளே வந்துவிடமுடியும் இங்கே தமிழகத்திற்க்கு திராவிட அரசியல் வந்தால் மட்டுமே பார்பனியத்தை எதிர்கமுடியும் ஏனென்றால்

கன்னட தெலுங்கு மலையாளம் முன்று மொழிகளும் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத ஆகிய இரண்டு மொழிகளில் இருந்து உருவானவை.

சமஸ்கிருத கோட்பாடுகளை எதிர்க்க தமிழ் மொழியால் மட்டுமே முடியும் தமிழ் 50000 வருடங்கள் பழைமையான மொழி - ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதற்கான அங்கிகாரத்தை உலகமெங்கும் கொண்டு சென்றது.

கர்நாடக கன்னடர்களும் , ஆந்திர தெலுங்கர்களும் , கேரளா மலையாளிகளும்  தமிழகத்தில் அரசியல் செய்ய திராவிடம் என்ற சொல் தேவையான ஒன்று ?

இப்போ என்ன பிரச்சனை என்னவென்றால்  எல்லாரும் வந்து சிறுநீர் போக தமிழ்நாடு என்ன பொது கழிவறையா ?

இந்த நிலத்தில் நீ வாழமட்டுமே உரிமை உண்டு.

இது தமிழ் நாடு

திராவிட நாடு கிடையாது திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை தமிழர் நிலைத்தை தமிழன் ஆள முடியாது.

கர்நாடக கன்னடர்களும் , ஆந்திர தெலுங்கர்களும் , கேரளா மலையாளிகளும்  தமிழகத்தை ஆளலாம் தமிழன் ஆள முடியாதாம்.

தமிழ்  தமிழ்நாடு - திமிரி எழும் தமிழன் கையில் கிடைக்கும் நம்பிக்கையுள்ளது.

திராவிடம் ஹிந்து வும் சமஸ்கிருத சொல்லாக இருக்கும் பொழுது நான் எப்படி என்னை திராவிடன் என்றும் ஹிந்து என்றும் சொல்ல முடியும்... மாறாக நாம் ராவணன் பரம்பரையில் வந்த மறத்தமிழர்...  ஈழம் புகழ் மாறன்...

No comments: