Thursday, January 17, 2019

கடவுள் உண்மையிலே இருக்கிறாரா?

"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது..!

*மின்சாரம் என்றால் என்ன?*

*உயிர் என்றால் என்ன?*

*மறுபிறப்பு எப்படி ஏற்படுகிறது?*

*இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?*

- என்ற கேள்விகளுக்கு யாராவது
_"இதுதான்"_  - என்று முடிவாக நிரூபிக்க முடிந்தால், கடவுள் உண்டா, இல்லையா என்பதையும் நிரூபிக்க முடியும்..!

மேற்சொல்லியவற்றை சற்று ஆழ்ந்து பாருங்கள்..!

_எல்லாமே இயக்கம்தான்..! _(Process)_

_எதுவுமே ஒரு பொருளாகக்_
_(Object) கிடையாது._

ஆகவே,
_*கடவுள் என்பதும் ஒரு இயக்கம் தான்..!*_🙏🏻

_அது உயிரற்ற_ பொருள்களில்,
_(Inanimate Objects)_
_உறக்கமாக இருக்கிறது._

_உயிர்ப் பொருள்களில்,_
_(Animate Objects)_
_உயிராக - பிரக்ஞையாக_ -
_உணர்வாக - சக்தியாக_ -
இருக்கிறது..!_

இயக்கம் என்று வரும் பொழுது,
மேடு, பள்ளம்;
இன்பம், துன்பம்;
பகல், இருட்டு;
ஆண் - பெண்
- என்று மாறுபட்டு இயங்குகிறது.

அப்பொழுது தான் அது ஒரு இயக்கமாக இருக்க முடியும்.

ஆகவேதான்,
_*"உங்கள் உள்ளே உள்ள உயிர்த்தன்மையை வணங்குங்கள்"*_ 🙏🏻
- என்று கூறுகிறேன்.

கடவுள் உங்களுக்குள்ளே - உங்களோடு, மிக நெருக்கமாக இருக்கிறார்.

அதை நீங்கள் வெளியே தேடுவது முட்டாள் தனமில்லையா?

ஆகவே,
கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம், ஒரு செயலோடு, அது சம்பந்தப்படும் பொழுது தான் தெரியும்..!

மின்சாரம் இருப்பதற்கு ஆதாரம், அது _செயல்வடிவம்_ பெறும் பொழுது தான் விளங்கும்.
eg -
டிவி, ரேடியோ, மோட்டார் ஓடுதல் .....

*கடவுள் உங்களிடம் உணர்வாக (Consciousness) இருக்கிறார்.*

ஹெய்சென்பெர்க் (Heisenbergh) என்ற ஒரு ஜெர்மன் விஞ்ஞானியின்,
_'நிலையாமைத் தத்துவம்'_
( Unerfainity Principle )
- பற்றி உங்களுக்குத் தெரியுமா...???

அவர் கூறுவது:
அணுவில் உள்ள மூலக்கூறுகள்,

"ஒரு சமயம்
_பொருளாகவும்,_

மறுசமயம்,
_அலையாகவும்_

இன்னொரு சமயம்,
_பொருளாகவும்_
_அலையாகவும்_

மறுசமயம்,
_எதுவுமே இல்லாமலும்_
( Nothing ! ) இருக்கிறது"
என்று கூறுகிறார் .

இதுவே கடவுள் தத்துவத்திற்கும் பொருந்தும் !

_கடவுள் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கிறார்..!_

அதனால் தான் மனிதன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான் 

இதில் புத்தர் அந்த ஒன்றுமற்ற தன்மையை (The Great Nothing) வற்புறுத்துகிறார்..

மதங்கள் பொருள்களை வலியுறுத்துகின்றன..

இவர்கள்தான்,
நீங்கள்  நம்பும் ஆத்திகர்கள்..!

யோகிகளும், ஞானிகளும் அலையை ( Waves ) வற்புறுத்துகிறார்கள்..

நாத்திகன்,
அலையையும் - பொருளையும் பார்த்துப் புரியாமல் தவிக்கிறான்..!

இதை ஆழ்ந்து புரிந்து கொண்ட ஒருவன் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, தன் வாழ்நாளை வீண்டிக்க மாட்டான்..!

*_மனிதன்,_*
*இந்த உலகத்தில்*
*படைக்கப்பட்டதே,*
*ஒருவருக்கொருவர் அன்பும்,*
*கருணையும் - கொண்டு,*
*உதவி செய்துகொண்டு,*
*ஆனந்தமாகச்*
*சிரித்து வாழவே..!*

_*வேறு எதற்காகவும் இல்லை..!*_

_பிறகு அவன் தன்னைத்தானே அறிந்துகொண்டு, ஞானத்தை அடைய வேண்டும்"..!_

~ Osho ~

No comments: