காரில் விபத்து நேரத்தில்
Air Bag தானாக திறந்து புஸ்ஸ்ஸ்
என ஊதி மனிதர்களின் உயிரை காப்பாற்றுவதை பார்க்கிறோம் ..
சரி, என்னைக்காவது இதைப் பற்றி யோசித்து இருக்கிறோமா ..?
மடித்து வைக்கப் பட்ட Air bag
வினாடி நேரத்தில்.. ( உண்மையில் வினாடிக்கும் குறைவான நேரத்தில்.. 0.3 Sec )
திடீரென காற்று எங்கிருந்து வருகிறது..??
வாங்க பார்க்கலாம் ..
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் Air bag குள் நிரம்பி இருப்பது காற்று அல்ல அது நைட்ரஜன் வாயு ..
அது எப்படி எங்கே இருந்து
வருகிறது என பார்த்தால் ..
காரின் முன் பக்கம் ஒரு
சென்சார் வைக்கப்பட்டு இருக்கும் அதன் பெயர் Crash Sensor, கார் குறிப்பிட்ட வேகத்தில் போய் கொண்டு இருக்கும் போது ,
திடீரென வேகம் முற்றிலும் தடை பட்டால் அந்த deceleration ஐ அது விபத்து என புரிந்து கொள்கிறது ..
உடனே அதில் உள்ள சிறப்பு மெக்கானிக்கல் அமைப்பு ஒன்று இயங்கி 12 v மின்சாரத்தை
Inflator system என்ற ஒரு அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது.
அந்த Inflator System க்குள்
ஏற்கனவே Sodium Azide (NaN3) மற்றும் Potassium Nitrate (KNO3) வைக்க பட்டு இருக்கும்..
அனுப்பி வைக்கப்பட்ட 12 v
மின்சாரம் அங்கே இக்னேட்
பண்ணப்பட்டு சின்ன பற்ற
வைப்பு ஒன்றை நிகழ்த்துகிறது..
அதன் விளைவாக அங்கே வைக்க பட்ட Sodiam Azide மற்றும் Potassium Nitrate உடனடியாக வினை
புரிந்து நைட்ரஜன் வாயுவை
உண்டு பண்ணி
நைலானால் செய்யப்பட்ட Bag
இல் புஸ்ஸ்ஸ் என நிரம்புகிறது..
விபத்து நடந்து வினாடியில் 10 இல் 3 பங்கு நேரத்துக்குள் இவைகள் நடந்து முடிந்து விடுகின்றன ..
(இவற்றை இக்னேட் பண்ண, மின்காந்த வகை ஸ்விட்ச் மற்றும் மெக்கானிக்கல் வகை ஸ்விட்ச் மற்றும் பீஸோ எலக்ட்ரிக்கல் ஸ்விட்ச் என பல வகையில் கிடைக்கிறது..)
ஒரு Air Bag ஒரு முறை மட்டுமே
பயன்பட கூடியது அதன் பின்
அதை மாற்றியாக வேண்டும்..
உயிர்க் காற்று ஆக்சிஜன் னா ..
*உயிரை காப்பாற்றும் காற்று நைட்ரஜன் தான் 👍*
No comments:
Post a Comment