Wednesday, May 31, 2017

...இயேசுவுக்கு சாட்சியாகுதல்... உண்மைச்சம்பவம்...

               
*அமெரிக்கா* நாட்டில் போதகர் ஒருவர் பஸ்ஸில் பிரயாணம் செய்தார்.
அருகிலிருந்த நடத்துனரிடம் சில்லரைகளைக் கொடுத்து பயணச்சீட்டு ஒன்றையும் வாங்கினார்.
பயணச்சீட்டிற்குரிய தொகையை எடுத்துக் கொண்டு மீதி சில்லரையை அப்போதகரிடமே கொடுத்துவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார் நடத்துனர்.
மீதி சில்லரைகளை எண்ணிப் பார்த்த போதகர் அதில் சுமார் *10 சென்டுகளை* நடத்துனர் தவறுதலாகக் கூட கொடுத்திருப்பதை அறிந்தார்.

ஒருபக்கம், கூட கொடுத்த காசினை திரும்ப அவரிடம் கொடுத்துவிட அவர் மனம் நினைத்தாலும்,
""ச..... இந்த பஸ் நிறுவனம் ஏற்கனவே அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இந்த 10 சென்டுகள் ஒன்றும் பெரிய தொகை அல்ல நஷ்டம் ஏற்படுவதற்கு......'' என்று மறுபுறம் அவர் மனம் மாறி யோசித்து குழம்பியது.
இப்படியிருக்க, அவர் இறங்க வேண்டிய இடமும் வந்தது. பஸ்சை விட்டு இறங்கும் முன்னர் தன் பையிலிருந்து 10 சென்டுகளை நடத்துனரிடம் கொடுத்து,
""ஐயா எனக்கு 10 சென்டுகளை தவறுதலாக கூட கொடுத்து விட்டீர்கள்'' என்றார்.
நடத்துனரின் பதில் அவரை திடுக்கிடச் செய்தது.

""ஐயா, நான் அறிந்தே இந்த 10 சென்டுகளை உங்களிடம் கூடக் கொடுத்தேன்.
நீங்கள் தானே இந்த சபைக்கு வந்திருக்கும் "புதிய போதகர்".
அந்நிய தேவனை வணங்கும் நான் கிறிஸ்துவைப் பற்றி சற்று தினங்களுக்கு முன் தான் அறிந்தேன். இந்த கிறிஸ்துவை வணங்கும் கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அறியவே இச்சிறு சோதனை.
"மெய்யாகவே மற்றவர்களைக் காட்டிலும் நீங்கள் வித்தியாசமானவர்கள் தான்."
இனி நான் கிறிஸ்துவை அறிந்துக் கொள்ள தொடர்ந்து உங்கள் சபைக்கு வருவேன்'' என்றார்.

பஸ்சை விட்டு கீழிறங்கிய போதகர்
""ஐயோ ஆண்டவரே 10 சென்டுகளுக்காக உம்மை  விற்க இருந்தேன்! என்னைக் காத்துக் கொண்டீரே! என்று நன்றி செலுத்தினார்.

இயேசுவை அறிந்த நமக்கும், அறியாத மற்றவர்களுக்கு ஓர் வித்தியாசம் தேவை.
அந்த வித்தியாசம் நம் வாழ்வில் உண்டா?
📖
என் "உண்மையும் என் கிருபையும்" அவனோடிருக்கும்,
என் நாமத்தினால் "அவன் கொம்பு உயரும்".
சங்கீதம் 89:24

No comments: