
நிம்மதி “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் [அதாவது, நிம்மதி] உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
ஆறுதல் “நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவர் போற்றப்படுவாராக. அவரே கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்; எல்லா விதமான ஆறுதலின் கடவுள். எங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும் அவர் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.”—2 கொரிந்தியர் 1:3, 4.
புத்திமதி “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுபட்டிருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் கடிந்துகொள்ள மாட்டார்; எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற அவர் அவனுக்கும் கொடுப்பார்.”—யாக்கோபு 1:5.
தப்பு செய்யாமல் இருக்க முடியும் “நீங்கள் சோதனைக்கு இணங்கிவிடாதபடி தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.”—லூக்கா 22:40.
மன்னிப்பு ‘என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னிப்பேன்.’—2 நாளாகமம் 7:14.
மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் “ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள் . . . நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” —யாக்கோபு 5:16.
கடவுள் நம் ஜெபத்தைக் கேட்கிறார் என்ற சந்தோஷம் கிடைக்கும் கடவுள் சாலொமோனிடம்: “நான் உன் ஜெபத்தை கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன்” என்று சொன்னார்.—1 இராஜாக்கள் 9:3
No comments:
Post a Comment