Friday, June 30, 2017

SHOW YOUR NEGATIVE SIDE...


*
ஒரு மரத்தின் கிளையில் ஒரு காகமும், கிளியும் அமர்ந்தது, அப்போ காகம் கிளிய பார்த்து ஒரு hai சொல்லிச்சு,
அதுக்கு அந்த கிளி ஏய் காகமே உனக்கு அறிவு இல்லையா,
எத்தனை தடவை என்கிட்ட பேசாதன்னு சொன்னாலும் நீ கேக்குறது இல்ல,
உன்கிட்ட நான் பேச மாட்டேன்ன்னு சொல்லுச்சாம்,
அதுக்கு காகம் கேட்டுச்சி, நானும் பறக்குறேன், நீயும் பறக்குற, நம்ம இரண்டு பேருமே பறவை இனம்தான பின்ன ஏன் இப்படி பிரிச்சி பேசுறன்னு கேட்டுச்சாம்,
அதுக்கு கிளி சொல்லுச்சி...
பறவை இனமா இருந்தாலும் உன் நிறம் கருப்பு, உன் voice கேவலம், உன்னைய பாக்கவே சகிக்கல, ஆனால் என்னைய பாரு நான் எவ்வளவு அழகா இருக்கேன்னு,
என் நிறம் பச்சை, என் அலகு சிவப்பு.
அதைவிட என் voice ரொம்ப sweet, அதனால நம்ம இரண்டு பேரும் வேற வேற, உன்னைய என் கூட ஒப்பிடாதன்னு சொல்லிட்டு வேற ஒரு கிளைல போய் உக்காந்துடுச்சி, இதை கேட்ட காகம் ரொம்ப வருத்தமா கிளி கிட்ட சாரி கேட்டு, மனசுக்குள்ள அழ ஆரம்பிச்சதாம்,
இப்போ அந்த வழியா ஒரு வேடன் வந்துகிட்டு இருந்தான், வந்த வேடன் அந்த கிளிய பிடிச்சிட்டு வீட்டுக்கு கொண்டு போய்டுறான், இத பார்த்த காகம் அவன் பின்னாடியே போய் அங்க நடக்குறதலாம் பார்த்துட்டு இருந்துச்சாம்,
வீட்டுக்கு கொண்டு போய் கிளிய ஒரு கூண்டுக்குள்ள அந்த வேடன் அடைச்சி வச்சி அதுக்கு பேச கற்று கொடுக்குறான். கிளியால பேச முடியல,
அவனும் அதை விடல, மறு நாள் வெள்ளை பூண்டை சுட்டு கிளி வாயில தடவுறான், கிளி வலியால துடிக்குது, அதுக்கு அப்பவும் பேச வரல, இவனும் விடல இன்னொரு நாள் வாசம்பு எடுத்து கிளியோட வாயில தடவி பேசு பேசு ன்னு அதை கண்ணா பின்னான்னு திட்டுறான்,
அன்னைக்கு ஒரு நாள் அமவாசை வந்தது, வேடனுடைய மனைவி காகத்திற்கு சோறு வைக்க சாப்பாடு போட்டு அவன் கையில கொடுக்குறா, அவன் மாடிக்கு போய் கா,. கா... கா... கா... ன்னு கூப்ட்டு காகத்தை கூப்பிட்டு சாப்பாடு வைக்கிறான்,
அந்த காகமும் சாப்ட வந்து உக்கார்ந்தது, இப்போ அந்த காகம் கிளிய பார்க்குது. அந்த சாப்பாட பாக்குது, திரும்பவும் கிளிய பார்க்குது. அந்த சாப்பாட பாக்குது, இப்போ அந்த காகம் கிளிய பார்த்து ஒன்னே ஒன்னு சொல்லுச்சு...
பார்த்தியா..
அவன் பாஷைல உன்னைய பேச வைக்க உன்னை இப்படி பாடா படுத்துறான்.
என் பாஷைல என்னைய கூப்பிட்டு சோறு வைக்கிறான்னு..
இப்போ அந்த கிளி தன்னுடைய ஆணவத்தை நினைச்சி வருந்தி காகத்துகிட்ட sorry கேட்டு திருந்திச்சாம்....
இந்த கதையில வருகிற மாதிரிதான் நம்மிடையே பலரும் நிறம், பணம், பதவி, ஜாதி, இப்படி இதில் ஏதோ ஒரு ஆணவத்துடன்தான் நம் அருகில் உள்ளவரை கூட அணுகுகிறோம்,
நாம் மேலே கண்டவை...
நமது நிறம், பணம், பதவி, ஜாதி எல்லாம் ஒன்றும் இல்லை. இதை காட்டி கொண்டே அலைந்தால் நம்முடைய reality என்ன என்பதே தெரியாமல் போய் விடுகிறது, நம்முடைய reality என்பதை நாம் ஏன் மற்றவருக்காக மறைக்க வேண்டும்.
மறைப்பதை விட ஏன் அவரை ஏமாற்றுவதாக நினைத்து நடித்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்...
இன்றைய உலகில் பலரும் தன்னுடைய positive side மட்டுமே காட்டி கொண்டு தனக்கு இருக்கும் தனக்கே உரித்தான தனது negative side மறைத்து கொண்டு இருக்கிறார்கள்,
உங்களுடைய positive side விட negative side அதிகம் வெளியே காட்டுங்கள்,
அதனால் நிறைய நன்மைகள் இருக்கிறது
முதலாவது உங்களை சுற்றி உள்ளவர்களை அடையாளம் காணலாம், இரண்டாவது அந்த negative side ல இருந்து நீங்கள் திருந்தி வெளி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
வெளியே வாருங்கள்..

No comments: