கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
கொல 3:16.
கொல 3:16.
வாசமாயிருப்பதாக என்ற வார்த்தையானது இனாய்கீடோ (enoikeitō) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது ஆகும். இதற்கு நிலையாக தங்கியிருத்தல் என்று பொருள். அபோஸ்தலராகிய பவுல் கொலோசெயர் திருச்சபை விசுவாசிகளுக்கு, “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக நிலைத்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகின்றார். எப்படி கிறிஸ்துவின் வசனம் எனக்குள் பரிபூரணமாக நிலைத்திருக்க முடியும் என்று யோசிகின்றீர்களா?. ஒரு வசனத்தை மறுபடியும், மறுபடியும் பலவிதங்களில், பல கோணங்களில் சிந்தித்து, நினைவூட்டி மனதில் உட்கிரகிக்கும் செயல்முறையே தியானம் ஆகும். வேத வசனங்களை தியானிப்பதன் மூலமாக, கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக நிலைத்திருக்க முடியும்.
இன்றைய உலகில் யோகா, Transcendental Meditation போன்ற தியான முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. மனதை வெறுமையாக்கி, ஒருநிலைப் படுத்தும் முயற்சிகள் இவைகள். இது ஒருவேளை தற்காலிகமாக ஒருவருக்கு மன அமைதியையும், அலைமோதும் எண்ணங்களை மேற்கொள்ளும் சக்தியை கொடுத்தாலும், அது தேவனைவிட்டு தூரமன, தவறான வழிகளில் திருப்ப வழியை உண்டாக்குகிறது. மனம் வெறுமையாவதால் இருளின் அதிகாரங்களும், தீயசக்திகளும் தாக்குவதற்கு இடமுண்டாக்குகிறது. ஆதலால் இந்த முறைமைகளை விசுவாசிகள் பின்பற்றக் கூடாது.
ஒரு சிலர் வேதத்தை வாசித்து சிறிது நேரத்தில் தாங்கள் வாசித்ததை மறந்து விடுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் வசனத்தில் ஆழ்ந்து சிந்திக்க நேரம் கொடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தையோ அல்லது பகுதியையோ வாசிப்பதன் மூலமாக அந்த நாளுக்கான கடமையை நிறைவேற்றி விட்டதாக அவர்கள் எண்ணுவார்கள். இவர்கள் வேதத்தை வாசிக்கின்றாகள் ஆனால் தியானிக்கவில்லை. கர்த்தருடைய வேதத்தை வாசிப்பது மட்டுமல்ல, அதை தியானிக்கிற மனுஷனே பாக்கியவான் என்று வேதம் கூறுகிறது.
வேதத்தை மேலாக்க படித்தால் அதன் அர்த்தம் ஒன்றும் யாருக்கும் புரிவதில்லை. ஏதோ வாசித்தோம் என்று இருக்குமே ஒழிய, அதை தியானிக்கும்போதுதான் கடவுள்அந்த வார்த்தையை எழுதி வைத்ததன் நோக்கத்தை நாம் உணர முடியும். அதை தியானிக்கும்போது கடவுள் அதன் அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்தி காட்டுவார். செரிமானத்திற்கு ரசம் குடிப்பவர்களுக்கும், அதிலுள்ள பூண்டு மற்றும் மிளகின் நன்மைகளை பெற வேண்டும் என்று ரசம் குடிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. செரிமானத்திற்கு ரசம் குடிப்பவர்கள் மேலிருக்கும் ரசத்தை மாத்திரம் குடிப்பார்கள். அவர்களுடைய ஆசையெல்லாம் அப்பொழுது சாப்பிட்ட சாப்பாடுக்கு ஒரு செரிமான பானம் தேவை அவ்வளவு தான். ஆனால் அதிலுள்ள பூண்டு மற்றும் மிளகின் நன்மைகளை பெற நினைப்பவர்கள் ரசத்தை நன்றாக கலக்கி, அடியிலுள்ள பூண்டு மற்றும் மிளகுகளையும் சேர்த்து சாப்பிடுவார்கள்.
பூண்டு மற்றும் மிளகின் ரசத்தை மட்டும் குடித்தவர்கள் ஞானிகளா? அல்லது ரசத்தோடு சேர்த்து பூண்டு மற்றும் மிளகை சாப்பிட்டவர்கள் ஞானிகளா? வேதத்தை வாசிகின்றவர்கள் ஞானிகளா? வேதத்தை தியானிகின்றவர்கள் ஞானிகளா? நீங்கள் வேதத்தை வாசிப்பதோடு நிறுத்திவிட்டு, தியானிக்க முற்ப்படவில்லை என்றால், கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள் பரிபூரணமாக நிலைத்திருக்காது. சாத்தானின் விரிக்கும் பாவ வலையில் அடிக்கடி சிக்கி, கிறிஸ்துவ வாழ்க்கையில் ஏன் இவ்வளவு போராட்டம் என நொந்துகொள்வீர்கள். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக இருந்தால், நீங்கள் பாவத்தை மேற்கொள்ளும் வெற்றியுள்ள வாழ்க்கையை வாழ்வீர்கள்
அன்பின் நோபல்.
அன்பின் நோபல்.
No comments:
Post a Comment