ரோசம் இல்லா மக்களுக்கு ரேசன் பொருள் எதற்கு
மானம் இல்லா மக்களுக்கு மானியம் எதற்கு
சினம் கொள்ளா மக்களுக்கு சிலிண்டர் எதற்கு
கொட்டக் கொட்டக் குனியும் குரங்கின மக்களுக்கு
கொடுங்கோல் ஆட்சியே தான் சரி
மெல்லச் சாகும் இனி இந்தியா
இருப்பவன் எல்லாம் வெளிநாடு ஓடிப் போவான்
மல்லையா போன்று.
இல்லாதவன் இங்கே கிடந்து அடிமையாகச் சாவான்
விவசாயிகளைப் போன்று.
இனியும் நீ துணிய வில்லை என்றால்
துணியும் மிஞ்சாது
ஆளும் அரசின் திட்டம் தெரிந்தும்
அவர்களின் கொட்டம் அடக்காமல் இருந்தால்
நட்டம் சாமானிய மக்களுக்கே.
ஓட்டுப் போட உயிரை மட்டும் விட்டு
உன்னை ஊனமாக்கி பிச்சையெடுக்க விட்டு விடுவார்கள்.
ஒழுங்காய் ஒன்று கூடி போராடு ;இல்லை
உன் இனமே அழிந்து விடும் வேரோடு.
நாளை இப்படியும் ஓர் திட்டம் வரலாம்
இரண்டு கிட்னி இருந்தால்
மூன்று வேளை உணவு உண்ணத் தடை
இரண்டு கண் இருந்தால்
ஆடை உடுத்தத் தடை
இரண்டு காலும் இருந்தால்
அரசாங்க சாலையில் நடக்கத் தடை
இரண்டு கையும் இருந்தால்
பிச்சை எடுக்கத் தடை
மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ...
படித்ததில் பிடித்தது..
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment