நாமெல்லாம் வாழ்கிறோமா????
மனைவி இந்த கேள்வியை இப்போது அதிகம் கேட்க ஆரம்பித்துவிட்டாள்.
எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்.
நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு #சொந்த_ஊர் சுமையாக இருந்தது . . . .
அதை உதறி வீசினார்கள்... வேகம் மேலும் கூடியது...
பந்தயம் மேலும் கடினமான போது #தாய்மொழியே சுமையாக இருந்தது...
அதையும் வீசினார்கள்... இன்னும் வேகம் அதிகரித்தது...
பின்னர் #அறச்சிந்தனைகள் பெரும் சுமையாயின...
அவை அனைத்தையும் உதறிவிட்டு ஓடினார்கள்...
இறுதியில் #உறவுகள் யாவும் சுமையாகிப்போயின...
அவற்றையும் கழற்றி வீசிவிட்டு பொருளாதாரப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள்...
இப்போது பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை என்ற வெறி மட்டும் எஞ்சி உள்ளது...
இனி #வீசி எறிய எதுவுமில்லை...
#குடும்பங்கள் யாவும் சிதறிக்கிடக்கின்றன...
மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் #பெரியவர்கள் #உருவாகி விட்டார்கள்...
பிறந்த பிள்ளையின் பசிக்கு பால் ஊட்ட கூட நேரம் இல்லாத #இளம்_அம்மாக்கள் உருவாகி விட்டனர்...
மனைவி அடிவயிற்று வலியால் துடித்தாலும் அரவணைத்து தட்டிக்கொடுக்கும் பக்குவம் இல்லாத வாட்சப், பேஸ்புக் போராளி #இளம் #கணவர்கள் உருவாகியிருக்கிறார்கள்...
👳 பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்திலேயே #இதயம் வலிக்கிறது...
பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது...
வந்து #பார்க்க வழியில்லை...
எல்லோருடைய நேரத்தையும் #நிறுவனங்கள் விழுங்கி விட்டன...
நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. ப்ளாட் வாங்கியதை கூட பெற்றவர்களிடம் சொல்ல #நேரமில்லை...
#மனித_மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது...
மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள் மழலைக்காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். ஜன்னல்கம்பிகளும், ப்ளாஸ்டிக் பொம்மைகளும், #ஆயா மட்டுமே உலகம்...
இந்த கால கல்வி முறையில் பிள்ளைகள் முழுமையாக வீட்டில் இருப்பதே #ஐந்து வயது வரைக்கும் தான்...
அதன் பின்னர் ஓடத்தொடங்கும் அவர்கள் #வாழ்நாள் முழுவதற்கும் நிற்பதற்கு வழியே இல்லை...
அந்த ஐந்து வயது வரைக்குமாவது பெற்றோருடனும் உறவினருடனும் வாழும் உரிமை #குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை...
தொடக்கத்தில் #கூட்டுக்குடும்பங்கள் #தனிக்குடும்பங்களாக பிரிந்தன...
இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக #பிரிந்து இயங்குகிறார்கள்...
#பெற்ற_பிள்ளைகளை_ஐந்தே_ஐந்து #ஆண்டுகள்_கூட_பார்த்துக்கொள்ள #முடியாத_சமூகத்துக்கு_மழையும் #காற்றும்_சீராக_வழங்கப்படுமா_என்ன ?
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment