இழப்பதற்கு ஒன்றுமே இல்லை வாழ்வில், ஆனால் ஜெயிப்பதற்கு உலகமே உள்ளது.
வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி.. அதில் முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும். முள்ளை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே...
பறவைக்கு உணவளிக்காமல் கூண்டினை மட்டும் பராமரித்தால் அது மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
அதுபோல, உடலை மட்டும் பராமரித்தால் ஆத்மா மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
வீட்டு வேலைகளை அம்மா செய்த போது அதுஒரு வேலை என உணரவே இல்லை.
மனைவி செய்த போது கடமை தானே என தோன்றியது.
மகள் செய்த போது மனது வலித்தது.
ஒரு மடங்கு திறமை,
இரு மடங்கு தேடல்,
மூன்று மடங்கு பொறுமை
என்ற விகிதத்தில் உன்னை நீ தயார் படுத்தினால் மட்டுமே
உன் இலக்கை அடைய முடியும்...
அனுபவங்கள் உ(ன்)னை
முதிர வைத்துவிடும் - பிறர்
அலட்சியங்கள் உ(ன்)னை
அசைத்து எழுப்பிவிடும்,
முயற்சிகள் உ(ன்)னை - பலர் முன்
உயர்த்தி நிறுத்திவிடும்,
வாழ்க்கை உனக்கு இங்கு - புது
பாடங்கள் கற்றுத் தரும்! முயற்சி செய்..!!
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
எந்த செயலையும் யோசனை செய்வதில்
வெற்றி காண முடியாது.
செயல் படுத்தும் விதத்தை பொருத்தே
அதன் வெற்றி அமைகிறது.
முடியாத செயலை கூட முட்டாள்கள்
எளிதில் முடித்து விடுகிறார்கள்.
முடியும் என்ற செயலை கூட புத்திசாலிகள்
புரியாமல் தவிக்கிரார்கள்.
முட்டாள்கள் எல்லோரும் முடியாதவர்கள் அல்ல...
புத்திசாலிகள் எல்லோரும் தெரிந்தவர்கள் அல்ல...
வாழ்க்கையும் ஒரு புள்ளி போல
தன் கவலையை மறந்து முன்னேறுபவனுக்கு அது தொடக்கப்புள்ளி...
அக்கவலையில் மூழ்குபவனுக்கு
அதுவே முற்றுப்புள்ளி...
வாழ்வை வாழ தொடங்குங்கள்
நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது
தனது பலத்தினால் அல்ல... தொடர் முயற்சியினால்...
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர் உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!.
மண்ணுக்குள் புதைத்தாலும் விண்ணை நோக்கி வளரும்
வேகத்துடன் மண்ணைப் பிளந்து
வெளியேறும் விதைக்குள் இருப்பது தன்னம்பிக்கை.!!!!
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது.
செருப்புக்குள்ளே கல்லும்,
காதுக்குள்ளே ஈயும்
கண்ணுக்குள்ளே தூசியும்
காலில் முள்ளும்
வீட்டினுள் கலகமும்
எவ்வளவு சிறிதாயினும்
துன்பத்தைத் தரும்
அன்பைக் கொடுங்கள்
அன்பைப் பெறுங்கள்
யோசித்து ஒரு செயலைத் தொடங்கும் போது செவிடாய் மாறிவிடுங்கள் ஏனெனில் முதலில் உற்சாகமான சொற்களை விட கேலி சொற்கள்தான் அதிகம் இருக்கும்.
கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை..கல் தான் காணாமல்
போய்விடுகின்றது, பரந்த மனதுடன்
இரு உன்னை விமர்சிப்பவர்கள் அதில் காணாமல் போய் விடுவார்கள்...
உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லை என்றால் , நீங்கள் எல்லோருக்கும் *ஜால்ரா* அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்...
வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
இயன்றவரை உதவிடு
இயலாமைக்கு கதவிடு
அன்பு ஒன்றையே பயிரிடு
அகிம்சையை எங்கும் விதைத்திடு
கொண்டு போக ஏதுமில்லை
கொஞ்சம் கொடு தவறுமில்லை
வந்து போனவன் என்ன செய்தான்?
வாழும் மண்ணில் நிலையாய் நின்றான்
பறவைக்கு என்று ஏதுமில்லை
பசியுடன் இருக்கும் பறவை பாரினில்லை
உறவுக்கு சேமிக்கும் சேமிப்பு
உடல் போகும்போது வருமா?
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment