*ஒரு சின்ன கதை :*
*வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.*
*அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.*
*அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.*
*அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.*
*கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.*
*பறவை இனம் பெருகியது*.
*பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.*
*அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. அதனால்
எதிரிகளுக்கு உணவானது*
*மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.*
*பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்)*
*எந்த இனம் அழிய கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழிய காரணமானது*.
*அதே போல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை, நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டு மென்று கொடுத்து அழகு பார்க்கிறோம். அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.*
*பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது*.
*அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.*
*பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.*
*நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.*
*நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.*
*நீங்கள் கற்று கொடுக்க மறந்த பாடத்தை, இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும். எப்படி எனக்கும், என்னை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்ததோ அதே போல.*
*இதை தான் *ஆங்கிலத்தில்
survival of fittest என்று சொல்லுகிறோம்*
*அதை நோக்கித் தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
வாழ்க வளமுடன்.
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment