நாம் கழிவறைக்கு சென்று வந்ததும், உடனடியாக கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவி விடுகிறோம். ஏனென்றால், கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் நமக்குள் இருக்கிறது. ஆனால் கழிப்பறையை விட அசுத்தமானதும், அபாயகரமானதும் ஆன சில பொருட்கள் உள்ளன அவை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
சமையலறையில் பயன்படுத்தும் கரித்துணி மற்றும் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்பான்ஞ்ச் போன்றவற்றில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. இது 2,00,000 மடங்கு கழிவறையை விட அபாயகரமானதாகும். இது நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது.
நாம் மாமிசத்தை நறுக்க பயன்படுத்தும் பலகையில் அபாயகரமான பாக்டீரியாக்கள் அதிகமாக வாழ்கின்றன. சராசரியான நறுக்கும் பலகையானது, கழிவறையை விட 200 மடங்கு ஆபத்தானது.
தரை விரிப்புகளில் சதுர அடிக்கு 2,00,000 பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவை கழிப்பறையை விட 400 மடங்கு அபாயகரமானது. மற்றும் சுத்தமற்றதாகும்.
ஹோட்டல்களில் வழங்கப்படும் மெனு கார்டுகளில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாக்டீரியாக்கள் உள்ளன. இது கழிப்பறையை விட 10 மடங்கு அதிகம்.
அதிர்ச்சியாக உள்ளதா? நீங்கள் நாளின் அதிகப்படியான நேரத்தை உங்களது அலுவலக மேஜையில் தான் கழிக்கிறீர்கள். ஒரு ஆய்வில் அலுவலக மேஜையில் கழிப்பறையை விட 400 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களும், வைரஸ்களும் இருக்கிறதாம்.
உங்களது செல்போன்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதில் கழிப்பறையை விட 10 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நீங்கள் பேசும் போது உங்களது வாயில் இருந்து வருகின்றன. இவை தொற்றை உண்டாக்கும் தன்மை உடையது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள பகிருங்கள்.
#TamilNews #mostcontaminated #thantoilet
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment