Friday, October 20, 2017

தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்று இல்லை

ஒருவரிடம் 17 கார்கள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள். அவர் இறப்பதற்கு முன் தனது கார்களை மூன்று மகன்களுக்கும் பிரித்து உயில் எழுதி வைத்தார்.
இறுதி சடங்கு மற்றும் பிற கடமைகள் முடிந்த பிறகு, மூன்று மகன்களும் உயிலை வாசித்தனர். தந்தையின் 17 கார்களையும் மூன்று சம பங்குகளாக அவர் பிரிக்கவில்லை.
17 என்பது ஒற்றைப்படை எண்ணாகவும் பிரிக்கப்பட முடியாத ஒரு  எண்ணாக இருந்ததால் அவைகள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
மூத்த மகனுக்கு 17 கார்களில் பாதியை கொடுக்குமாறு எழுதப்பட்டிருந்தது.
இரண்டாவது மகனுக்கு மூன்றில் ஒரு பங்கும்
இளையவனுக்கு ஒன்பதில் ஒரு பங்கும்
எடுத்துக்கொள்ளுமாறு உயிலில் எழுதப்பட்டிருந்தது.
உயிலின் படி கார்களை எப்படி பிரித்துக்கொள்வது என மூவருக்கும் தெரியவில்லை. 17 கார்களை பாதியாக பிரித்து மூத்தவனுக்கு கொடுக்கமுடியாது. அது போல மற்ற இருவருக்கும் கார்களை பிரிக்க சாத்தியமில்லாத நிலையில் இருந்தனர்.
உயிலின் படி கார்களை பிரிப்பதற்கான பல வழிகளை அவர்கள் சிந்தித்தார்கள், ஆனால் எந்த முடிவுக்கும் அவர்களால் வரமுடியவில்லை.
இறுதியாக அந்த ஊரில் இருந்த கணக்கு ஆசிரியரிடம் சென்றார். புத்திசாலித்தனமான இந்த  பிரச்சனையைக் கேட்டு உடனடியாக ஒரு தீர்வைக் கண்டார்.
17 கார்களையும்  கொண்டுவருமாறு அவர் அவர்களிடம் கேட்டார்.
மகன்கள் அந்த கார்களை கணக்கு ஆசிரியர் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். ஆசிரியர் தன்னிடம் இருந்த ஒரு காரையும் சேர்த்து கார்களின் மொத்த எண்ணிக்கையை 18 ஆக்கினார்.
இப்போது, அவர் உயிலை  வாசிப்பதற்கு சொன்னார். தந்தையின்  விருப்பத்திற்கு ஏற்ப, மூத்த மகனுக்கு மொத்ததில் பாதி கார்களை பெற்றார், இப்போது அது 18/2 = 9 கார்களைக் குறிக்கிறது. மூத்த மகனுக்கு 9 கார்கள் கிடைத்தன.
மீதமுள்ள கார்கள் 9.
இப்போது உயிலின் படி இரண்டாவது மகனுக்கு  மொத்த கார்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3)
இது 18/3 = 6 கார்கள்.
இரண்டாவது மகனுக்கு 6 கார்கள் கிடைத்தன.
முதல் இரண்டு மகன்களும் 9 + 6 = 15 கார்களை பகிர்ந்து கொண்டனர்.
மூன்றாவது மகன் தனது பங்கைப் படித்தார். அவருக்கு ஒன்பதில் ஒரு பங்கு.
அதாவது  (1/9) x 18  = 2
இளையவர் தனது பங்காக 2 கார்களை பெற்றார்.
மொத்தம் 9 + 6 + 2 = 17 கார்கள் இருந்தன.
இப்போது ஆசிரிய்ரால் சேர்க்கப்பட்ட ஒரு கார் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
புத்திசாலித்தனமான இந்த பிரச்சனையை தனது  புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எளிதாக தீர்க்கிறார்.
இந்த உலகில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. 17 என்ற எண்ணை இரண்டால் வகுக்க முடியாது என்பது தீர்க்க முடியாத பிரச்சனை. ஆனால் அந்த ஆசிரியர் தன்னிடம் இருந்த ஒன்றை அதனுடன் சேர்த்து பிரச்சனைக்கு தீர்வு கண்டு கடைசில் தான் சேர்த்த ஒன்றையும் அவரோடு எடுத்துச் செல்கிறார்.
பிரச்சனைகளை தீர்க்க முயலும் போது அந்த பிரச்சனைக்குள்ளேயே மூழ்கிக் கிடக்காமல் சில சந்தோஷங்களையும் அதில் சேர்த்துக்கொள்ளும் போது உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

No comments: