Wednesday, October 25, 2017

ஒரு வரி வார்த்தைகள் : சிந்தனை செய்ய


தோற்ற இடமே வெற்றியின் தோற்ற (ஆரம்ப) இடம்!
வெளுத்ததெல்லாம் பால் அல்ல, பழைய சட்டை!
உலகில் அதிகம் பேர் இறக்கும் இடம் படுக்கையே!
குறைவாகப் பேசுங்கள், நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்!
ஒரே கருப்பு பேன்ட்டுக்கு ஐந்து சட்டைகளைப் பயன்படுத்துபவன்தான் மிடில் க்ளாஸ்!
நீந்த தெரிந்தும் மூழ்கி விடுகிறேன் கடனில்!
'ல'கரம் மாறியதால் வி'ளை' நிலம் வி'லை' நிலமானது!
எல்லாரும் அறியாதவர்களே, வெவ்வேறு விஷயங்களில்!
குறுக்கு வழியை என்றும் பயன்படுத்தாதவர்கள் ஆட்டோ/கார் ட்ரைவர்களே!
தந்திகூட ஒழிந்துவிட்டது, வ'தந்தி ஒழியவில்லை!
விதவையான தயிர்சாதம் சுமங்கலியானது ஊறுகாயின் வரவால்!
கோடையில் குளிர்ந்த காற்று குடிநீர் குழாயில்!
'மன்னிப்பு' கொடுக்கப்படும்போதைவிட கேட்கப்படும்போது சுகமானது!
துணை இழந்தவுடன் உடன் கட்டை ஏறிவிட்டது செருப்பு!
அப்பா இறந்தவுடன் சகுனம் பார்ப்பதை விட்டுவிட்டோம், எதிரில் வருவோரெல்லாம் அம்மாவாகத் தெரிவதால்!
தமிழிலேயே அர்ச்சனை நடக்கும் இடம் வீடுதான்!
பிச்சைக்காரர் நம்புவது கடவுளை அல்ல, பக்தர்களையே!
விண்ணை முட்ட உயர வேண்டுமானால் வெந்துதான் ஆகவேண்டும் சூளையில் செங்கல்!
பரிதாப்படும் நிலையில் இருப்பதை விட, பொறாமைப்படும் நிலையில் இருப்பது மேல்!
காலையில் வாங்கப்படும் பாக்கெட் பாலில் தொடங்குகிறது ப்ளாஸ்டிக்கின் அன்றாட வாழ்க்கை!
தாமதமாக வரும் ரயிலுக்கு சமம் "நீதி"
அவமதிப்பை புரியவும் அவமானப்பட வேண்டியுள்ளது!
தொடுவதற்கு சண்டை, பின் தொட்டதுக்கெல்லாம் சண்டை!
உன் எதிரியின் எதிரி நீதான்!

1 comment:

Anonymous said...

We are urgently in need of KlDNEY donors for the sum of $500,000.00 USD, Email for more details: Email: healthc976@ gmail.com
Call or whatsapp +91 994 531 7569