Wednesday, October 18, 2017

தேவையற்ற பேச்சு...

எல்லா பாலியல் தவறுகளுக்கும் அடிப்படை தேவையற்ற பேச்சு. எதிர்பாலினர் எந்த வயதை உடையவராயிருந்தாலும் சரி, வீண் பேச்சை தவிர்த்தாலே பல தவறான தொடர்புகள் குறையும்.
தவறான தொடர்புகள் அனைத்தும் அனைத்தும் ஒரே நாளில் ஏற்படுவதில்லை. அடிக்கடி பார்த்து, பேசி, முதலில் பொதுவான காரியங்கள் பற்றி பேசி, பின்பு குடும்ப பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டு, பின்பு ஆறுதல் சொல்கிறேன் உதவி செய்கிறேன் என்று தவறான தொடர்பில் முடிவடைகிறது.
இதன் ஆரம்பம் எங்கே என்று பார்த்தால், சாப்டிங்களா என்று அக்கறையுடன் கேட்கும் கேள்வியில் ஆரம்பம்....
சாப்டிங்களா என்று கேட்பது ஒரு தவறா? இத கூடவா கேட்பது தவறு? என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ஆனால் நீங்கள் யோசித்து பாருங்க உங்கள் ஆண் நண்பனிடமும் இப்படி அக்கரை காட்டடுவீங்களா??
நம்மை நேசிப்பது போல பிறனை நேசிப்பதுதான் கிறிஸ்தவம். ஆனால் அந்த அன்பு உங்கள் குடும்பத்துக்கோ, மற்றவர் குடும்பத்துக்கோ இடறலாய் இருக்க கூடாது.
சரி விசயத்துக்கு வருவோம்..
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான் என்று வேதம் மிக தெளிவாக சொல்கின்றது.
பேசுவது தவறல்ல, தேவையானதை மாத்திரம் பேசுதல் தவறல்ல. தேவையற்றதையும், பிரச்சனை உண்டாக்குவதையும், பிரிவினையுண்டாக்கும் தேவையற்ற பேச்சுக்களையும் பேசாமல் தன் உதடுகளை அடக்குகிறவனே புத்திமான்.
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 1 கொரி 15:33.
உங்கள் கஷ்டங்களையும் பாரங்களையும் தேவனிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தாரோடு பகிருங்கள்.. மிகவும் தேவைப்பட்டால் உங்கள் சபையில் உள்ள உங்கள் பாலினத்தை சேர்ந்த ஒரு மூப்பரோடு பகிருங்கள்.
உங்கள் எதிர்பாலினரிடம் பகிர்ந்து ஆறுதல் தேடுவது மிக தவறு.
உலக சிநேகம் தேவனுக்கு பகையல்லவா....யாக்கோபு 4:4-ல் வேதம் நம்மை எச்சரிக்கிறது.
எளிதில் விழுந்து விடுவது மனித இயல்பு. எளிதில் விழ வைப்பது சாத்தானின் இயல்பு.
“தேவனுடைய சாயலை இழந்துவிடும்படி நாவை உபயோகிக்காமல், அதற்கு எல்லையைக் வைத்துக்கொண்டு பேசுங்கள்.
இல்லையேல் தேவனுக்கு மிக அருவருப்பான தேவனால் மிக வெறுக்கப்படும் விபச்சாரத்துக்குள் வீழ்வோம்.

No comments: