Tuesday, October 24, 2017

சிந்தனைச் சிதறல்

"எந்தவொரு மெழுகுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடுவதில்லை. எனவே, எந்த சூழலிலும் பிறருக்கு உதவுவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் அது ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்"🌻 மெழுகுவர்த்தியின் தியாகத்தை பேசும் இந்த உலகம் தீக்குச்சியின் மரணத்தை நினைப்பதில்லை💐
நாம் இருக்கும் வரை மனிதர்களிடம் அன்பாய் இருப்போம். மனித நேயத்துடன் பழகுவோம்🌼
பிறரை வாழ்த்தி பேச முடியாவிட்டாலும் தாழ்த்தி பேசுவதை குறைத்தால்
*வாழ்க்கையில் உயரலாம்*
வாழ்க்கையில் சந்தோசத்தை மட்டும் எதிர் நோக்கி சென்றால். நமக்கு துன்பம் மட்டும்  தான் வந்து சேரும். நமக்கு வரும் கஷ்டங்களை இஷ்டமாய் ஏற்று எதிர் நோக்கி செல்லுங்கள். நீங்கள் எதிர்பாராத சந்தோசம் உங்களை தேடி வரும்
முன்னோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
மனம் பரந்து விரிவடையும் போது எல்லாமே அன்புமயமாகி விடுகிறது. அது எளிமையானது . தன்னிச்சையானதும் கூட...
வலி மிகுந்த  வாழ்க்கைப் பயணம்...
வழி நெடுக புது முகங்களின் சந்திப்பு...
ஒவ்வாெரு முகமும் ஒவ்வாெரு உறவாக மனதில் பதிகின்றன...
ஆனால்!!! எந்த உறவும் இறுதி வரை உடன் வரப்பாேவதில்லை...
ஏதாே ஒரு நிமிடத்தில் பிரிந்தாக வேண்டிய நிர்ப்பந்த கட்டாயம்...
வாழ்க்கையின் இறுதி வரை மனிதன் கற்கும் அற்புத பாடமே -
இந்த பிரிவு தான்!
வாழ்க்கையில்செய்துவிட்ட தவறுகளைதிரும்ப திரும்ப
ஞாபகப்படுத்தி மனதிற்குள்  பேய்களுக்கு இடமளிக்காதீர்கள்
தவறுகளை திருத்திக்கொண்டு இனி அதுபோன்ற தவறுகளை செய்யாமல் மறந்துவிட்டு நிம்மதியாக தலைநிமிர்ந்து நல்ல நேர்மறையான எண்ணங்களோடு வாழ வழிகளை தேடுங்கள் நிம்மதி பெறுவீர்கள்
இறைவனின் அருளும் துணையும்எப்போதும் உங்களுடன் இருக்கும் !!!
"நடந்ததை மற, நடப்பதை நினை"
             " உன் நிம்மதியும் "
" உன் சந்தோசமும் உன் எதிர்காலமும் "
     எங்கேயும் போய்விடவில்லை
அது உனக்குள்ளே பத்திரமாக இருக்கிறது..!!
உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை
எப்போதெல்லாம் நீ அதிக சாந்தமாக உணர்கிறாயோ அப்போதெல்லாம் நீ சரியான திசையில்தான் செல்கிறாய் என்பதை நினைவில் கொள்... !!!
என்ன நிகழ்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாதே.
மேலும் அதிக அமைதியை, சாந்தத்தை, மௌனத்தை, உணர்தலே நீ இறைமையின் தோட்டத்தை நெருங்குகிறாய் என்பதற்கான அடையாளம்...
அந்த சாந்தமே நீ அந்த குளுமையான தோட்டத்தின் அருகே இருக்கிறாய் என்பதை
காட்டுகிறது.
நிழலடர்ந்த மரங்கள் உனக்காக காத்திருக்கின்றன. தென்றல் வாசமாக,
குளிர்ச்சியாக வீசுகிறது.
நீ அதை காற்றில் உணரலாம். நீ அதை சூழ்நிலையில் உணரலாம்.
சாந்தம் தான் பரவசத்தின் முதல் அறிகுறி.
அமைதிதான் தூரத்தில் உள்ள சிகரத்தின் முதல் தரிசனம்.

No comments: