Thursday, October 5, 2017

தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஏற்ப்பட்ட கொடுமை இதோ...

தமிழனின் சராசரி உயரமான ஆறரை அடி, எப்படி படிப்படியாக குறைந்து ஐந்தரை அடி உயரம் ஆனது தெரியுமா...???
ஜப்பானின் குள்ள ரக நெல்லையும் நமது உயரமான நெல் வகையையும் கலப்பினம் செய்து இரசாயன உரத்தை ஏற்கும் குள்ள நெல் ரகமான ஆர் துறை 27 எனும் ரகம் உருவாக்கப்பட்டது.
இதில்தான் இந்தியாவின் பயோடெக்னாலஜி அதன் மூர்க்கத்தை காட்டி வெளிநாட்டு இராசயன கம்பனிகளின் லஞ்ச பணத்தை முதலில் பதம் பார்த்தது.
இதன் மறுபதிப்புதான் ஐ ஆர் 8 ரக அரிசிகள் (International Rice Research Institute. Philippines)ல் உள்ளது.இதன் சுருக்கம்தான் IR 8.
IR 5, IR 20, IR 22, IR 36, IR 63 எல்லாமே குள்ள ரகம்தான்.இதனால் வைக்கோல் தீவனத் தட்டுப்பாடு வர வைக்க திட்டமிட்டு நம் நாட்டு மாடுகளை ஒழித்தார்கள் உலக வர்த்தகர்கள்.
இரண்டாம் உலகப் போரில் எஞ்சிய வெடி மருந்துகளை எல்லாம் நம் தமிழ் மண்ணில் உரம் என்று போலிப் பெயர் சூட்டி விற்கப்பட்டது இதன்மூலம் மண் மலடானது.
நீர் கழிவானது. விவசாயம் அழிந்தது. மரபணு மாற்ற பயிர்களுக்கு நீர்த் தேவையளவு அதிகமாக்கப்பட்டது.
உரத்துக்கு கடன் வாங்கி வெளிநாட்டு நெல் ரகங்களால் தண்ணீர் தேவை அதிகமாகி தண்ணீர் அரசியலாக்கப்பட்டு,தரணி காத்த தஞ்சை விவசாயி கலப்பை கை விட்டு தூக்கு கையிறை கையில் எடுத்தான்.
உரங்களால் நம் மண்ணில் உயிர்கள் வாழ்வது அதாவது மண்புழு, பூராண், பாக்டீரியாக்கள் இல்லாமல் போனது.
அதனால்தான் விளைச்சல் இல்லாமல் போனது. உரத்தால் மண் மலடாகி, உணவுப் பொருள் விஷமாகி, நீர் விஷமாகி மக்கள் நோய்க்கு உள்ளாகி, இதனால் மருத்துமனைக்கு செல்வது அதிகமாகி, மருந்துகள் விற்பனை அதிகமாகி அதிலும் உலகவர்த்தகம் பணம் சம்பாதித்தது.
குறைந்த வயதில் குழந்தைகள் மிக அறிவாளிகளாக இருப்பது அவர்களில் ஆயுட்காலம் இன்னும் சுருங்கப் போகிறது என்பதையே காட்டுகிறது. அன்புக்கு வேலையே இல்லாத கதி உண்டாகிறது.
நாம் மேலை நாட்டுக்காரன் பிஸ்கட் போட்டு வளர்க்கும் நாய்க் குட்டிகளாக மாறி அவன் வரைந்துள்ள தடத்தில் பயணிக்கிறோம்
இது ஒற்றைக் குடியாட்சியில்தான் முடியும். இதன் வேறு பெயர்தான் உலக மயமாக்கல்.
பல உணவுப்பொருள் உற்பத்தியாளர்களாக அதாவது கடலை, ஆமணக்கு, துவரை, காராமணி, கொள்ளு, உளுந்து, நெல், கம்பு, ராகி உற்பத்தி செய்தவர்களை,
ஒற்றை பயிர் மற்றும் கோழி, ஆடு, மாடு என்று தனித்தனி பண்ணையாளர்களாக்கி எல்லாவற்றையும் விலை தவறான நிர்ணயம் மூலம் ஓழித்தார்கள்.
இயற்கையின் உயிர் செயல்பாட்டில் கை வைத்து, விஷத்தை மக்களுக்கு விற்று நோயாளியாக்கி, சிந்தனைக் குருடர்களாக்கி, பொருளாதார அநாதைகளாக்கி, போராட்ட குணத்தை மழுங்கச் செய்து அடிமையாக்கி உலக வல்லரசுகளின் கைப்பாவை ஆக்கினான் ஒற்றைகடியாட்சி நிறுவ துடிப்பவன்.
பழையது என்று பாராமல் நம் பழமையான பாரம்பரியம் என்று சொல்லி பின்பற்றுவோம்.
உலகத்துக்கே ராஜ போக கருப்புக் கவுணி அரிசி ஏற்றுமதி செய்த தமிழன் இன்று சாப்பிடுவது பாரம்பரிய அரிசியா? மரபியல் மாற்றம் செய்த அரிசியா? சற்று சிந்தித்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுங்கள்...

No comments: