*வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்*
*ஜனகண மன பாடல் யுனெஸ்கோ வால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது*
தவறான தகவல்
தவறான தகவல்
*பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது*
அது சினிமா செட்..
அது சினிமா செட்..
*குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது*
இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
*திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்*
உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?
உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?
*இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு*
பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் ...
பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் ...
*இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்*
ஒரு ஷேர்க்கு ஒரு ரூபாய்னா , அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?
ஒரு ஷேர்க்கு ஒரு ரூபாய்னா , அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?
*இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்*
இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?
இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?
*ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு*
போட்டோசாப் வேலை...
போட்டோசாப் வேலை...
*இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்*
இருக்குற டேட்டாவும குறையும் ...
இருக்குற டேட்டாவும குறையும் ...
*மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்*
புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச்சுருக்காரா?
புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச்சுருக்காரா?
*இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது*
பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.
பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.
*599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்*
அமேசான மூட போறாங்களா?
அமேசான மூட போறாங்களா?
*குழந்தையைக் காணோம்*
அந்தக் குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க்கிட்டிருக்கு. கொழந்த கெடச்ச பின்னாடியும், இனிக் குழந்தை காணாம போனா தேதியோடப் போடுங்க.
அந்தக் குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க்கிட்டிருக்கு. கொழந்த கெடச்ச பின்னாடியும், இனிக் குழந்தை காணாம போனா தேதியோடப் போடுங்க.
*ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்*
தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?
தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?
*இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்*
அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?
அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?
*3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு*
எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.
எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.
*தடுப்பூசி போட்டால் ஆபத்து*
பொய். எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக்கொள்ளவில்லை.
பொய். எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக்கொள்ளவில்லை.
*10 ரூபாய் நாணயங்கள் செல்லாது*
பொய்.
பொய்.
*வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்குச் செல்கிறது*
அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.
அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.
*டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்*
ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.
ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.
*இந்த நடிகர் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூடத் தரவில்லை* அவன் காசு. அவன் இஷ்டம்.
* நான் வாட்ஸப்ல சேர்ந்த காலத்துல இருந்து காஞ்சிபுரத்துல ஒரு பள்ளிப் பேருந்து ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு...
இன்னும் இது மாதிரி நிறைய....
👆👆👆👆👆
"இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே , கெடச்சா கிடைக்கட்டும் , அனுப்பி பாப்போம்னு அனுப்பாதிங்க"
"இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே , கெடச்சா கிடைக்கட்டும் , அனுப்பி பாப்போம்னு அனுப்பாதிங்க"
இந்த ஃபேக் நியூஸ்களின் பின்னே, ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன்படுத்தி லாபம் அடையவேண்டும்.
எனவே நீங்கள் வாட்ஸ்அப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள். தேவையற்ற, வீண்பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால் கூடப் பரவாயில்லை; அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள். இணைய உலகில் மறைந்திருக்கும் பிராடுகளிடம் இருந்து இனியாவது விடுபடுவோம்.
No comments:
Post a Comment