Thursday, October 26, 2017

தீீமை எந்த உருவத்தை எடுத்தாலும் அதை எதிர்த்துப் போராடுங்கள்

கடவுள் மனிதன் காவியம் 6 அத்தியாயம் 351
சேசுவின் சீடர்களுக்குள் பகைமை இருக்கக் கூடாது. ஒரே எதிரி சாத்தான் தான் அவனுடைய கடுமையுள்ள எதிரிகளாக இருந்து அவனுக்கு எதிராகவும் மனிதருடைய இருதயங்களில் சாத்தானை ஸ்தாபிக்கிற பாவங்களுக்கு எதிராகவும் நிகழும் போரில் கலந்து கொள்ளுங்கள்...
தீீமை எந்த உருவத்தை எடுத்தாலும், அதை எதிர்த்துப் போராடுவதில் சோர்வடையாமல் இருங்கள். பொறுமையாய் இருங்கள் ஒரு அப்போஸ்தலனின் செயல்பாட்டுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இது போதும், நான் இப்போது களைப்பாயிருக்கிறேன்,நான் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று பிசாசு ஒரு போதும் சொல்வதில்லை. அவன் சோர்வுராதவன் அவன் ஒரு நினைவைப்போல அல்லது அதைவிடவும் வேகமாக ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவனிடம் போய் சோதிக்கிறான், எடுக்கிறான், கெடுக்கிறான், வாதிக்கிறான், எந்த சமாதானத்தையும் தருவதில்லை. ஒருவன் விழிப்பாயிருப்பதற்கும் அதிகமாக இல்லையென்றால், நம்பிக்கைத் துரோகமுள்ள முறையில் அவன் தாக்கி அழிக்கிறான். சில சமயங்களில், ஒரு நண்பனைப்போல அவன் நுழைகிறான். ஒரு மனிதனிடமிருந்து அவன் வெளியே துரத்தப்படும்போது, கடவுளின் திருக்கரங்களிலோ, அல்லது அவருடைய ஊழியர் ஒருவரின் கரங்களிலோ தான் பட்ட அவமாணத்திற்கு பழிவாங்கும் படி அவன் இன்னும் நல்ல ஒரு இரைக்காகச் சுற்றித் திரிந்து அதைத் தாக்குகிறான். ஆனால் அவன் சொல்கிற நான் ஓய்வெடுக்க மாட்டேன் என்ற அதே வார்த்தைகளை நீங்களும் சொல்ல வேண்டும். நரகத்தை மனிதர்களால் நிரப்புவதற்காக அவன் ஓய்வெடுக்காமல் இருக்கிறான். மோட்சத்தை மனிதர்களால் நிரப்பும்படி நீங்கள் ஓய்வெடுக்காமல் இருக்க வேண்டும். அவனுக்கு இடம் கொடுக்காதீர்கள். நீங்கள் அவனுக்கு எதிராக எவ்வளவு போராடுகிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் உங்களைத் துன்பப்படச் செய்வான் என்று நான் முன்னுரைக்கிறேன். ஆனால் அதுபற்றி நீங்கள் கவலைப்படக் கூடாது பூமியெங்கும் பரந்து செல்ல அவனால் முடியும். ஆனால் மோட்சத்திற்குள் பிரவேசிக்க அவனால் முடியாது. ஆகவே அங்கே உங்களைத் துன்புறுத்த அவனால் முடியாது. அவனுக்கு எதிராக போரிட்டவர்கள் அனைவரும் மோட்சத்தில் இருப்பார்கள்.

No comments: