Tuesday, November 28, 2017

முடிவு உங்கள் கையில் இல்லை...

ஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்.....!!
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து...!!
ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து,
பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.....!!!
ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன....!!!
ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை.....!!!
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர்.....!!!
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின.....!!
உடல் நடுங்கியது....!!!
இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர்....!!
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன....!!
அப்போது, மிகப் பெரிய சப்தம்...!! திரும்பிப் பார்த்தார்கள்......!!
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது , மலையிலிருந்து மிகப் 'பெரிய பாறை' விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் உயிருடன் தப்பவில்லை....!! இவர்கள் இருவரைத் தவிர.....!! பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்......!!!
குயிலோசை இல்லை......!! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன......!!
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு பயந்து தாவி ஓடின....!
இளம் தம்பதிகள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்....!!! இருவரும் சொல்லிக் கொண்டார்கள்...!!
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கவே கூடாது......!!
ஏன் அப்படிச் சொன்னார்கள்....?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
100% உங்கள் யூகம் தவறாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது....!!
அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்காமல் பயணித்திருந்தால்.......!!! சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும்....!!
பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் உயிருடன் தப்பி இருப்பார்கள்......!!!
தற்கொலை செய்து கொள்ள வந்த இளம் தம்பதிகள் உயிரோடு இருக்கிறார்கள்....!!!
வாழும் சிந்தனையுள்ளவர்கள் விபத்தில் பலியானார்கள்...!!
வாழ்வதும், இறப்பதும் நம் கைகளில் இல்லை....!!!
முடிவை தேடி நாம் ஒரு போதும் செல்லக்கூடாது....!!
எதிர்மறையான சிந்தனை உங்களுக்குத் தோன்றி இருந்தால்...
நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்களை குறைகளை கடவுளிடம் மட்டும்  கூறுங்கள் கண்டிப்பாக அதற்க்கான தீர்வை தந்தருள் புரிவார்கள்...

No comments: