Saturday, November 25, 2017

கவலை கொள்ள தேவையில்லை...

👍🚕🚗🚙👍
*லண்டன் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்றுகொண்டிருந்தன*!
*ஒரு கார் பல🚙 மணிநேரமாக பழுதடைந்து* நின்று கொண்டிருந்தது.
அதன் உரிமையாளர் பலவழிகளில் அதை சரிசெய்ய முயன்றார். ஆனால், *ஒரு சிறிய அளவிற்கு கூட பயன் தரவில்லை*
*அருகில்* *உதவி செய்ய யாருமில்லை*
*ஒர்க் ஷாப் அருகே எதுவுமில்லை* அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்பொழுது *ஒருகார் அவர் அருகே வந்து நின்றது. அதிலிருந்து வயதான முதியவர்* ஒருவர் இறங்கி வந்தார்.
அருகில் வந்து,
“என்ன பிரச்சினை?” என்று கேட்டார். ஏற்கனவே எரிச்சலோடிருந்த அவருக்கு முதியவர் அப்படி கேட்டது மேலும் எரிச்சலூட்டியது,
*கோபத்துடன் அவரைப் பார்த்து*, “நான் இந்த காரின் உரிமையாளர் மட்டுமல்ல,
*காரை பழுது பார்ப்பதில் நிபுணர்* எனக்கே இது புரியவில்லை, நீர் வயதானவராகவும் இருக்கிறீர், உமக்கென்ன தெரியும்?” என்று கேட்டார்,
ஆனாலும் இந்த முதியவர் வற்புறுத்தியதால் வேண்டாவெறுப்பாக அவரிடம் கார் சாவியை கொடுத்தார், *முதியவர் காரை முழுவதும் நோட்டமிட்டார்*!
*கார் இஞ்சினில் ஒரே ஒரு வயரை சரி செய்தார்* இப்பொழுது காரை start செய்யுங்கள் என்றார்.
என்ன ஆச்சரியம்!
*பல மணிநேரமாக பழுதடைந்து நின்றுகொண்டிருந்த அந்த கார் ஒரே நிமிடத்தில் சரியாகி விட்டது*!
அந்த காரின் உரிமையாளருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
*முதியவரின் கைகளை பற்றிக்கொண்டு, “ஐயா, என்னை மன்னித்து விடுங்கள்* உங்களை தவறாக எண்ணிவிட்டேன்.
*ஐயா நீங்கள் யார்*?  என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் புன்முறுவலுடன், “
*இந்த காரை தயாரிக்கும் Henry Ford நான் தான்*! என்றார்.
*கார் உரிமையாளருக்கு பேச்சே வரவில்லை*!
*Henry Ford காரில் ஏறிக்கொண்டே*!
*காரை உருவாக்கிய எனக்கு, அதில் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதா*?  என்று கேட்டார்.
*அன்பான சகோதர, சகோதரிகளே என்னைக் குறித்து அக்கறை கொள்ள யாருமேயில்லை* என் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக்கூட யாருமில்லை, என்று *கண்ணீர் வடிக்கின்றீர்களா*?
*உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்*
*ஒரு காரை உருவாக்கின ஒருவருக்கு அதன் பிரச்சினைகள்* தெரியுமானால்....
🌸👍🌺 *அஞ்சாதே!நான் உன்னுடன் இருக்கிறேன்! கலங்காதே! நான் உன் கடவுள்!நான் உனக்கு வலிமை அளிப்பேன்!உதவி செய்வேன்!என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்*!
எசாயா 41:10

No comments: