Thursday, November 30, 2017

இந்த ஜோக்க வாசிங்க

😀😇😇😇😇😇😡😇😇😇😇😇😡
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம் போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
😇😇😇😇😇😡😇😇😇😇😇😡😇😇😇😇😇😡😇😇😇😇😇😡😇😇😇😇😇😡
WHAT IS SUNDAY?
6 நாள் வேலை செய்துவிட்டு ஒரே ஒரு நாள் வீட்டில் ஓய்வு எடுக்க நினைக்கும் ஆண்...
6 நாள் வீட்டிற்குள்ளேயே வேலை செய்து விட்டு ஒரு நாள் வெளியே செல்ல நினைக்கும் பெண்...
இந்த இருவருக்கும் இடையே நடக்கும் சண்டை தான் Sunday...!!!
😇😇😇😇😇😡😇😇😇😇😇😡😇😇😇😇😇😡😇😇😇😇😇😡😇😇😇😇😇😡
அம்மா: டேய் ஏண்டா முடிய நீளமா வளத்துகிட்டு ரப்பர் பேண்டெல்லாம் மாட்டிட்டு அலையறே..?
பையன்: இதுதாம்மா இப்போ ஃபேஷன்
அம்மா: நாயே .... உங்க அக்காவ பொண்ணுபாக்க வந்தவங்க  உன்ன பிடிச்சிருக்குண்ணு சொல்லிட்டு போயிருக்காங்க
😇😇😇😇😇😡😇😇😇😇😇😡😇😇

No comments: