Wednesday, June 14, 2017

GST... புரியலையா? இதை வாசிங்க... தெளிவாயிடும். ..

டேய்.. எப்படிடா இந்த மாதிரி, குடும்பங்களின் ஆணி வேரை கூட தோண்டி, துருவி ஆராய்ச்சி பண்றீங்க?
GST குழப்பமாக உள்ளது என்பவர்கள்மட்டும் படிக்கவும். அம்மா முன் கைகட்டி வாய்பொத்தி தலைகுனிந்து  படுபவ்யமாக நிற்கும் ரஜினிக்கும் GST க்கும் உள்ள சம்பந்தம் கீழே! இதனைப் புரிந்துகொண்டால் உங்களுக்கு எல்லாம் எளிதில் விளங்கும்.
• மலையாள நடிகர் மோகன்லாலின் மாமனார் முன்னாள் நடிகர்-தயாரிப்பாளர் பாலாஜி
• பாலாஜியின் அக்கா பெயர் விஜயா பார்த்தசாரதி
• விஜயா பார்த்தசாரதி ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ஆவார்.
• ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கை பெயர் லதா.
• லதா, ரஜினிகாந்தின் மனைவியாவார்.
• லதா ரஜினிகாந்தின் மகள் பெயர் ஐஸ்வர்யா
• ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் தனுஷ்
• லதாரஜினியின் தம்பி பெயர் ரவி ராகவேந்திரன்
• ரவி ராகவேந்திரனின் மகன்தான் இசையமைப்பாளர் அனிருத்
• ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் பெயர் மதுமிதா.
• மதுமிதாவின் கணவர் பெயர் அருண்.
• இந்த அருண், விஜயா சாமுண்டீஸ்வரியின் மகன் ஆவார்.
• விஜயா சாமுண்டீஸ்வரியின் அப்பா யாரு தெரியுமா? பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்.
• பாலிவுட் நடிகை ரேகாவின் தந்தையும் இந்த ஜெமினி கணேசன் தான்.
இப்போ தெளிவாயிடிச்சா?
சரி…இப்போ சொல்லுங்க…!!! மோகன்லாலுக்கும் ரேகாவுக்கும் என்ன உறவு?
இதற்கு மட்டும் விடை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு GST விதிகள் எல்லாம் சாதாரணமாக்கும்!
படித்ததில் மிகவும் பிடித்தது!

No comments: