Friday, December 1, 2017

உலகின் தலைசிறந்த புத்தகம்

மூன்றாம் நூற்றாண்டில் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் துறந்து எகிப்திய பாலைவனத்தில் ஒரு முனிவரைப் போன்று வாழ்ந்தவர் தூய வனத்து அந்தோனியார்.
வனத்து அந்தோனியார் முனிவரைப் போன்று வாழ்ந்தாலும், அந்நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்த பெரிய பெரிய தலைவர்கள் மற்றும் அரசர்களோடு அவர் நல்லுறவோடு இருந்தார்.
நிறைய நேரங்களில் உரோமையை ஆண்டுவந்த கான்ஸ்டான்டிநோபிள் என்ற மன்னன் வனத்து அந்தோனியாரிடம் ஆலோசனை கேட்டு கடிதம் அனுப்பி வந்தான்.
கான்ஸ்டான்டிநோபிளைப் போன்று பிற நாடுகளில் இருந்த அரசர்களும் அவரிடத்தில் கடிதம் எழுதி ஆலோசனை கேட்டு வந்தார்கள்.
இதனால் வனத்து அந்தோனியாரை ஏனைய துறவிகள், மக்கள் யாவரும் மிகப்பெரிய மனிதராக நினைத்து வந்தார்கள்.
ஒருநாள் துறவிகள் சிலர் வனத்து அந்தோனியாரிடம் வந்து, “நீங்கள் பல நாட்டு அரசர்களோடும் கடிதத் தொடர்பில் இருக்கின்றீர்கள்.
உண்மையில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆள்?” என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதற்கு வனத்து அந்தோனியார், “என்னைப் பொறுத்தளவில், நான் நம்பி ஏற்றுக்கொள்ளும் கடிதத்திற்கு முன்பாக அரசர்கள் எழுதி அனுப்பும் கடிதங்கள் எல்லாம் ஒன்றுமில்லை; அவையெல்லாம் தூசுக்குச் சமமானவை” என்றார்.
“அரசர்கள் உங்களுக்கு அனுப்பும் கடிதங்களை விடவும் மேலான கடிதம் ஒன்று இருக்கின்றதா, அது என்ன? எங்களிடத்தில் அதைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார்கள்.
வனத்து அந்தோனியாரோ மிகப் பொறுமையாகச் சொன்னார், “அரசர்கள் எனக்கு எழுதி அனுப்பும் கடிதங்களை விடவும் மேலான கடிதம் ஒன்று இருக்கின்றதென்றால் அது கடவுள் மனிதருக்கு எழுதிய கடிதமான விவிலியத்தைத் தவிர வேறொன்றும் இல்லை”.
  • ஆம், இந்த உலகத்த்தில் விவிலியத்தை விட சிறந்த கடிதம், சிறந்த புத்தகம் வேறு என்ன இருக்க முடியும்?

...

No comments: