Sunday, December 17, 2017

சிந்தனைக்கு சில வரிகள்

பரமபதத்தில் (தாயம் விளையாட்டு) ஏணியில் ஏறினாலும் சரி, சர்ப்பம் தீண்டினாலும் சரி, குறிக்கோளை அடையும் வரை விளையாட்டாக, மகிழ்ச்சியுடன் முன்னேற முயற்சி செய்கின்றோம். அதைப்போல வாழ்வில் ஏற்றம், இறக்கம் வரலாம் நமது மன நிலையை எதிலும் நிலைகுலையாமல் சரிசமமாக வைத்து குறிக்கோளை நோக்கி மகிழ்ச்சியாக முன்னேறி சென்றால் மட்டுமே நமது இலக்கை சென்றடைய முடியும்...
உன் அன்பினால் ஒருவர் திருந்தினால் நீ கடவுளுக்கு நிகரானவன்...
உன் அதிகாரத்தால் ஒருவர் திருந்தினால் நீ யமதர்மராஜனை போன்றவன்..
உன் நடத்தையால் ஒருவர் திருந்தினால் நீ உலகின் உதாரண புருஷன்...
தன்னம்பிக்கை! தெளிவு!! துணிச்சல்!!! இந்த மூன்றும் தான் ஒருவரை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்...
வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதை விட யாரையும் வேதனை படுத்தவில்லை என்பதே சிறந்தது...
நாலு பேருக்கு நல்லது செய் எந்த கிரஹங்கள் கெட்டுஇருந்தாலும் அவைகெடுதல் செய்யாது உனக்கு  நியாயமா  நினைப்பது அனைத்தும் உன் இல்லம் தேடி உன்னை அடையும்...
முரணான கல்விமுறை : ஒழுக்கத்துடன் வளர வேண்டிய மாணவர்களுக்கு அளவில்லா சுதந்திரம்... சுதந்திரத்துடன் கற்பிக்க வேண்டிய ஆசிரியருக்கு அளவில்லா கட்டுப்பாடுகள்...
"குருவே, என்னிடம் உள்ள குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது?"
குரு : உன் மனைவியிடம் போய் சண்டையிட்டு பார். உன் குறைகள் மட்டுமல்ல, உன் பரம்பரையில் உள்ள அத்தனை பேரின் குறைகளையும் புட்டு புட்டு வைப்பாள்...
இரண்டே இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில்போட்டு மென்றுவிட்டு 2 நிமிடம் கழித்து கொஞ்சம் வெந்நீர் பருகுங்கள். ஒரு முறை கூட இருமல் இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். Cough syrup செலவு எதுவும் இருக்காது. மழைக்காலத்தில் அனைவருக்கும் மிகவும் தேவை...🤝🤝🤝
எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பதுதான் தீபத் தத்துவம்.
பிரச்சினைகள் பெரிது என்று கடவுளிடம் போய் சொல்லாதீர்கள். என் கடவுள் பெரியவர் என்று பிரச்சனைகளிடம் சொல்லுங்கள். பிரச்சனையே தெரியாது...

No comments: