Tuesday, January 9, 2018

உலகில் எப்படி வாழ வேண்டும்? தன்னம்பிக்கை வரிகள்!

 உன்னுடைய தன்மானத்தை யாரிடத்திலும் விட்டுக்கொடுக்காதே... உன்னை விட சிறந்தவன் இந்த உலகில் ஒருவருமில்லை.
 நமது மனஉறுதி எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளதோ அதற்கு தக்கபடிதான் நமது வெற்றியின் அளவும் இருக்கும்....
 எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.....!!
 பொறுமையும் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் சகிப்புத்தன்மையும் தெளிவான சிந்தனையும் இருந்தால்...... வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிக்கலாம்....!
 உலகத்தில் வாழ வேண்டும்... சாகும் வரை அல்ல..... நம்மை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை...
 முடிந்த பிரச்சினைகளுக்காக வருந்தாமல் வரும் காலத்தை துணிந்து எதிர்கொள்....
 மிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது.... மிகவும் சந்தோஷமான விஷயம் உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது...
 பூமியில் விழுந்த  விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !
 ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
 பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன !
 மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன !
 ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன !
 சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன !
 தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
 ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன !
 இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ ? ! ?

No comments: