Sunday, February 11, 2018

விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்

மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,
விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,
எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,
திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,
மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,
எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம் திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம், இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்.
 விளைவித்தவன் பிச்சைக்காரன். விலை வைத்தவன் இலட்சக்காரன்.
 இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்,
 இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்,
 இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்,
 இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்,
 இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்,
 இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்,
 எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை,
இப்படிக்கு
பட்டம் பெற்ற விவசாயி மகன்

No comments: