* வெற்றிலையை பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து அருந்தினால் இருமல் குணமாகும்.
* உருளைக்கிழங்கை உப்பு கரைத்த வென்னீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து வைத்து கொண்டால் பல நாட்கள் வரை உருளைக்கிழங்கு கெடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
* காளான் பிரஷ்ஷாக இருக்க பிளாஸ்டிக் கவருக்கு பதில் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
* குடிநீரில் துளசி இலையை போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாகவும், ஜலதோஷம் வராமலும் இருக்கும்.
* எந்தவகை கீரையாக இருந்தாலும் அதில்காரம், உப்பு, புளி இவற்றை கூடுதலாக சேர்த்து விட்டால் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.
* கரும்பிற்கு இனிப்பு, இன்பம், மகிழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உண்டு.
* கரும்பிற்கு முக்கியவத்தும் கொடுக்கும் வகையில் கரும்பிசை, கரும்புமொழி, கரும்புவில், கரும்புவிழி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் முந்தையகாலங்களில் சூட்டப்பட்டுள்ளது.
கரும்பு அப்போதைய வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து இருந்ததால் பல்வேறு பழமொழிகளும் இதை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
அதாவது, கரும்பு கசக்கிறது என்றால் வாய்க்குற்றம், கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று, கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா, கரும்பு தின்னக் கூலி வேண்டுமா... போன்றவை இன்றும் பேச்சுவழக்கில் உண்டு.
No comments:
Post a Comment