Friday, October 26, 2018

கடவுள் இல்லை என்று சொல்லாதே...

கடவுள் இல்லை !!?? மேலோட்டமாக பார்த்தால் கடவுள் மறுப்பு கொள்கை போல தோன்றும் ??!! ஆனால் மெய்யுணர்ந்து பார்த்தால் கடவுள் இருப்பு கொள்கையே அது ?? எப்படி !! பார்ப்போம் !!
இல்லை - இல்லை என்று கருதுவதில் இருப்பது தெரியவில்லை அதனால் இல்லை !!
இல்லை என்பதை கொண்டே எப்போதும் வாழ்கிறோம் !!
உணவு இல்லை - உணவை தேடுகிறோம் !!
அறிவு இல்லை - படிப்பில் அறிவு கிடைக்கும் என்று படிக்க முயல்கிறோம் !!
திறமை இல்லை - திறமையை வளர்த்து கொள்கிறோம் !!
பணம் இல்லை - சம்பாரிக்க ஓடுகிறோம் !!
உடல்நலமில்லை - உடலை சீர்படுத்துபவரை நடுகிறோம் !!
அன்பு இல்லை - அன்பு கிடைக்கும் இடத்தை தேடுகிறோம் !!
என் முன் ஏதுமில்லை - என்னால் நடக்கமுடிகிறது !!
என் நுரையீரலில் நல்ல காற்று இல்லை - சுவாசிக்கிறோம் !!
பூமியை சுற்றி ஒன்றும் இல்லை என்பதாலேயே பூமியால் சுற்ற முடிகிறது !!
கோள்களுக்கு இடையே ஒன்றும் இல்லை என்பதாலேயே ஒன்றோடு ஒன்று முட்டி கொல்லாதே இருக்கிறது !!
இதுபோல ஏராளம் நம் வாழ்வில் !! இல்லை என்ற ஒன்றே இன்றுவரை நம் வாழ்வை இயக்கிக்கொண்டே இருக்கிறது !!
நம்மை சுற்றிபாருங்கள் இருப்பதை விட இல்லாததே நிறைந்து இருக்கும் !!
அப்படியே இருப்பதாக இருந்தாலும் !! இல்லாது அளித்த இடத்திலேயே இருக்கிறது !! அதுவும் இல்லாமலேயே போகும் என்றும் அறிவோம் !!
அப்போது இருப்பது எல்லாம் இல்லாமலே போகும் !!
இருப்பதும் இல்லை என்பது இடமளித்து சிறிது காலம் இருக்கவைத்தாலேயே இருக்கு !!
அப்போது இல்லை என்ற ஒன்றே கொண்டே எல்லாம் எதுவும் இயங்குகிறது !!
அப்போது இல்லை !! ( நம்மால் உணர முடியவில்லை !! அதனுள் இருப்பது தெரியவில்லை !! ) என்றாலும் இல்லை என்பதில் இருக்கும் பிரபஞ்சித்தின் பேராற்றல் ஆகிய சிவம் இருந்து கொண்டே இயக்கிக்கொண்டே இருக்கிறது !!
அதில் புலப்பட ஏதுமில்லை என்பதாலேயே இல்லையாக கருதுகிறோம் !! அந்த இல்லையே கடவுள் !!
இருக்கு என்பவர்கள் கூட !!??
அப்படி இருக்கு ? இப்படி இருக்கு ? அதில் இருக்கு ? இதில் இருக்கு ? என்று பிரித்து பார்த்து !! அவர்களுக்குள் ஓர் நிலையில் !! உருவம் கடந்து !! அருவுருவம் கடந்து !! அருவாய் !! எங்கும் எதுவுமாக உடனாய் !! வேறாய் !! பிண்ணி !! இணைந்து இருப்பதே  கடவுள் !! என்றே நிலையை எய்துவோம் !!
நாம் பின்னை உணர்ந்து அனுபவித்து எய்தும் நிலையை !! அறிந்தோ ?? அறியாதோ !! முதலிலேயே சொல்வதே கடவுள் இல்லை என்பது !!
இல்லை என்ற ஒன்றாய் எங்கும் எதிலும் நிறைந்து !! அண்டம் கடந்து !! பேரண்ட பேராற்றலாய் பறந்து விரிந்து இருப்பதே சிவம் ( கடவுள் )
இல்லை என்பதே கடவுளாகி எப்போதும் இருக்குக்கிறது என்ற மெய் ஞானம் ஆகும் !!
உணரமட்டுமே முடிந்தது இல்லையென்றே தோன்றும் !! உணர்வே இறைவன் !! உணர்வில் நிறுத்தி உருத்தியவன் திருவருளாலே பதிவு !!
இறைவனை இல்லை என்று சொல்லாதே ஒரு முறை நீயும் தேடிப்பார் உனக்கே புரியும்
இறை   தேடும் மனிதா நீயும் கொஞ்சம் இறைவனையும் தேடு...

No comments: