_விசேஷங்களில்_ _அழகான இளம்_ _பெண்களைக் கண்டால்_
`` _அடடா அவசரப்பட்டுட்டோமே_ ``_என்று நினைப்பது போய்…_
_சித்தி பையன் பாலாவுக்கு_ _இந்தப் பொண்ண கேக்கலாமே_ _எனத் தோன்றுகிறதா.??_
_சண்டை போட்ட_ _உறவினர்களின் மேல்_ _காழ்ப்பணர்ச்சி விகிதம்_ _கரைய ஆரமபித்திருக்கிறதா???_
~ *÷÷÷÷÷* ~
_உறவுகளில்_ _சம வயதினர்_ _அமெரிக்காவில்_ _செட்டில் ஆனால்_ _பொறாமைப்படுவது நின்று_
_நம்ம பையனுக்கு_ _பின்னாடி_ _பிரச்சினையில்லை…..,_ _REFER பண்ண_ _ஆளிருக்கு_
_என மனது_ _சாந்தப்படுகிறதா. ??_
~ *÷÷÷÷* ~
_மனைவியை_ _கவனிக்க_ _தவறிவிட்டதாக_ _உள் மனது ஒப்பாரி இடுகிறதா??_
~ *÷÷÷÷* ~
_திரைப்படங்களின்_ _முதல் நாள் முதல் காட்சி_ _பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??_
~ *÷÷÷÷* ~
_வெள்ளை முடி கவலை_ _அப்பிக் கொள்ள_ _ஆரம்பித்துவிட்டதா???_
~ *÷÷÷÷* ~
_மியூசிக் சேனல் பார்ப்பது_ _குறைந்து_ _செய்தி சேனல் பார்ப்பது_ _அதிகரித்திருக்கிறதா??_
~ *÷÷÷÷* ~
_ஞாயிற்றுக்கிழமை_ _யார் வற்புறுத்தலும்_ _இன்றி_ _காலையில் WALKING_ _போகிறீர்களா??._
~ *÷÷÷÷* ~
_இன்னிக்கு அமாவாசை,_ _ஏகாதசி,_ _சஷ்டின்னு_ _ஏதாச்சும்_ _இருக்கான்னு_ _மனசு பார்க்க வைக்கிறதா?._
~ *÷÷÷÷*~
_பாலிஸி DUE DATE_ _பாக்க_ _ஆரம்பித்து விட்டீர்களா??_
~ *÷÷÷÷*~
_ஒரு மருந்துக்கடைக்காரர்,_ _ஒரு சிறு உணவக முதலாளியின்_ _நட்பு_ _நிச்சயம்_ _ஏற்பட்டிருக்கிறதா??_
~ *÷÷÷÷* ~
_கவலையை மறக்க_ _காமெடி சானல்_ _பார்ப்பது_ _சிறந்த சாய்ஸ்_ _எனத்தோன்றுகிறதா??._
~ *÷÷÷÷* ~
_வண்ணத்திரை, சினிக்கூத்து_ _வாங்கிய கடைகளில்_
_சக்தி விகடனும்,_ _நாணயம் விகடனும்_ _வாங்க வைக்கிறதா??._
~ *÷÷÷÷* ~
_பல் விளக்க,_ _சேவிங் செய்ய,_ _குளிக்க_ _வழக்கத்தை விட_ _அதிக நேரம் ஆகிறதா?_
~ *÷÷÷÷* ~
_பிள்ளைகளின் ஆசை,_ _சோம்பல் மீதான_ _கோபம்_ _வடிந்து_ _``இப்போ அனுபவிக்காட்டி_
_எப்போ, ……_ _போய்ட்டு போகுது ``_ _என்ற எண்ணம் வருகிறதா??._
~ *÷÷÷÷* ~
_அலுவலகத்தில்_ _சனி,ஞாயிறு அன்று_ _நண்பர்கள்_ _ஏதாவது அவுட்டிங்_ _பிளான்_ _செய்தால்_ _தகுந்த காரணமின்றி_ _ஜகா வாங்க_ _வைக்கிறதா??._
~ *÷÷÷÷* ~
_சாலை கடக்க_ _பயப்படத் தொடங்கி_ _PEAK HOURS_ _அவாய்ட் பண்ணினால் என்ன_ _என்று மனைவியடம்_ _தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??_
~ *÷÷÷÷* ~
_பேருந்து வழக்கமாக_ _வரும் நேரத்திற்கு_
_ஒரு நிமிடம் தாமதமாய் போய்_ _ஓடிச்சென்று ஏறுவது நின்று,_ _ஐந்து நிமிடம் முன்னரே_
_பஸ்ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??_
~ *÷÷÷÷* ~
_என்னால் எல்லாம் முடியும்,_ _யார் தயவும் தேவையில்லை_ _என்ற எண்ணம் போய்„_ _உலக மக்கள்_ _அனைவரின்_ _கூட்டு உழைப்பால்_ _தான்_ _நமக்கு இந்த_ _வாழ்க்கை_ _சாத்தியமாயிற்று என்ற எண்ணம்_ _வருகிறதா??_
~ *÷÷÷÷* ~
_அப்ப நீங்க_
*"UNCLE"* / *AUNTY* _ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவைதான்…!_
😃😃😛😛ஐய்யய்யோ எல்லாமே இருக்குற மாதிரி தோணுதே...
No comments:
Post a Comment