Monday, November 5, 2018

சமற்கிருதம் பற்றி சிறு குறிப்பு...

பேசப்பட்ட இடம்: ஆசியா

இடம்: தென்னாசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகள்

பேசுபவர்களின் எண்ணிக்கை: 14, 135 சரளமாக பேசுவோர் (இந்தியாவில்- 2001 கணக்கெடுப்பின்படி)[1]

நிலை: முதல் நூறு மொழிகளுள் அடங்கவில்லை

மொழி மரபு இன வகைப்பாடு: இந்தோ-ஐரோப்பியன், இந்தோ-ஈரானியன், இந்தோ-ஆரியன்,  வடமொழி

ஏற்பு பெற்ற நிலை, ஏற்பு பெற்ற மொழியாயிருக்கும் நாடு: இந்தியா
மொழிக் குறியீடு ஐ.எசு.ஓ 639-1 sa, ISO 639-2 san, SIL SKT

சமற்கிருதம் (Sanskrit), அல்லது சங்கதம் என்பது இந்தியாவின்  மிகப்பழைய மொழிகளுள் ஒன்று. இம்மொழியையும் பாகத  மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.[2] தற்போது கர்நாடகா மாநிலத்தில் சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.[3] எனினும் இந்து சமயத்தின்  நான்கு வேதங்கள், பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள்  இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் (பாவணர் நூற்களில் நிரூபித்தார்) கூறுவர். சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.[4]

தொல்காப்பிய தமிழாக்கல் முறை தொகு

தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் வடமொழி  என தமிழாக்க விதிக்கிறது.[5] எனவே சமசுகிருதம் அல்லது சமற்கிருதம்  எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய வடமொழி நாடக இலக்கிய வரலாறு, சு. சாத்திரியார் இயற்றிய வடமொழி நூல்வரலாறு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

வரலாறு தொகு

சமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்[6]) வடமொழி பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராஷ்டிரி, சௌரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு கி.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது.

இம் மொழி பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம்  முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.

பல மேம்பட்ட ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், இலத்தீன்  முதலிய செம்மொழிகளுடனுமான வடமொழியின் பொது உற்பத்தியை, வடமொழியில் தாய் (மாத்ர்), தந்தை (பித்ர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஹெயின்றிச் ரோத் மற்றும் ஜொஹான் ஏர்ணெஸ்ட் ஹங்ஸ்லெடன்  என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய வடமொழி ஆராய்ச்சி, வில்லியம் ஜோன்ஸ் இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் தலைமையான பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், வடமொழிக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது.

வடமொழியே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும்.

வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது.

No comments: