Sunday, November 11, 2018

வாகனங்களில் எல்இடி பல்புகள் அகற்றப்பட வேண்டும்...

வாகனங்களில் சாதாரண விளக்குகள் அகற்றப்பட்டு எல்இடி பல்புகள் பொருத்தும் கலாச்சாரம் பொதுமக்களிடையே அதிகரித்துவருகிறது. இருசக்கர வாகனம் தொடங்கி ஆட்டோ, கார் என மற்ற வாகன ஓட்டிகளும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

உங்கள் வாகனங்களில் உள்ள LED விளக்குகளால் எதிரில் வருபவர்களுக்கு பயங்கரமாக கண் கூசுகிறது என்பதை உணரவேண்டும்.

உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்கள் வாகனத்தில் எல்இடி விளக்கை எரியவிட்டு எதிரே வந்து பாருங்கள். அப்போது மற்றவர்களுக்கான பாதிப்பு புரியும்.

அனைவரும் எல்இடி மாற்றிவிட்டால் விபத்துகள் தாராளமாக நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

நம்மால் ஒருவர் இறந்தபிறகு காவல்நிலையம், வழக்கு என்று அலைவதை விட இப்போதே உசாராகி விடுவது நல்லது.

எல்இடி வீடுகளில் பொறுத்தலாம். வாகனங்களில் பொறுத்தவேண்டாம்.

விபத்து என்பது எதிராளிக்குதானே என்பவர்களுக்கு.... நம் உறவுகளும் அந்த சாலையில்தான் செல்கிறார்கள் என்பதை மறக்க கூடாது.

எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என நினைக்காமல் உடனே எல்இடி விளக்கு அகற்றிவிட்டு சாதாரண விளக்கு பொறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தகவலை ஷேர் செய்தால் வாட்சப் கம்பெனிகாரன் ரூபா தரமாட்டான். உடனடியாக உங்கள் குடும்பத்தில் நல்லது நடந்து பணம் கொட்டாது.

ஆனால் நிச்சயம் விபத்துகள் குறையும். மருத்துவமனை, வக்கீல் செலவு தவிர்க்கப்படும்

பொது நலன் கருதி...

No comments: