Thursday, December 27, 2018

வாழ்க்கையின் இரகசியம்...

* சந்தோஷப்படுவதற்கும்.... வருத்தப்படுவதற்கும்.... ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை, வாழ்க்கை அழகானது...

* நமக்கு பிடித்தவர்களுக்கு நம்முடைய அன்பைக் காட்டினால் அதை அடிமை என்று நினைப்பவர்களுக்கு நம்முடைய அன்பை எப்படிப் புரியவைப்பது? அது போல நம்முடைய சோகங்கள் அனைத்தும் நாம் சேர்த்து வைக்கும்  சொத்துக்களல்ல நமக்கு பின் வரும் சந்ததியருக்கு சேமித்து வைப்பதற்கு, அவ்வப்போது அதை செலவழித்து விடவேண்டிய உணர்ச்சிகளே அவை...

* தொடர்பில் இருப்பதும்உரையாடி மகிழ்வதும் உறவென்னும் பாலத்தை சேர்த்து கட்டிவைக்கும் உறுதியான கயிறுகள்... எப்போது உங்கள் ஆசைகள் போதுமான வலுவுடன் இருகின்றதோ, அப்போது அதனை அடைவதற்கான அதிகபட்ச சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

* சிந்தித்து  செயலாற்றுங்கள் : ஒருவருக்குச் சாெல்லி புரியவில்லை என்றால் வாழ்க்கை அடித்துப் புரியவைக்கும்...!! சில ஏமாற்றங்கள் எதிர்பாராமல் வந்தவை. பல ஏமாற்றங்கள் நாமாக தேடிக்காெண்டவை...!!

* உணர்ச்சி வசபடுதலென்பது ஆணுக்கு காேபம்... பெண்ணுக்கு அழுகை...!!

* மற்ற எல்லா பண்புகளையும் விட சிறந்தது தைரியமே; ஏனெனில் உங்களிடம் தைரியம் இல்லாதபோது, மற்ற பண்புகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது.

* எதையும் செய்வதற்கு முன் என்னால் முடியாது என்று சொல்லக் கூடாது. அந்தச் சொல்லே நமது வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

* மகிழ்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் கவலைக்கு நமக்கு மிகவும் பிடித்தவரே காரணமாக இருப்பார்...!

* தினமும் காலையில் நம்மை சந்திக்க வரும் இரண்டு அழையா விருந்தாளிகள் நம்பக்கையும், அவநம்பிக்கையும். இதில் எந்த விருந்தாளியை நாம் உபசரிக்கிறோமோ, அதை பொருத்தே அன்றைய தினம் நமக்கு அமையும்.

* ஒருவரின் அர்த்தமே இல்லாத நிராகரிப்புக்காக கவலைப்படாதே. துணிக்கடையில் பல பேரால் ஒதுக்கப்பட்ட ஒரு துணி யாரோ ஒருவருக்கு பிடித்துப்போனதாய் அமைகிறது...

* நம்முடைய சொற்கள் பிறருடைய இதயத்தில் விதையாக விழ வேண்டும். விஷமாக இறங்கக்கூடாது. பூவாக உதிர வேண்டும். முள்ளாக கிழிக்கக்கூடாது. நல்லதை மட்டுமே பேசுவோம்...

* வயதாகி விட்டதே என்று நாம் கவலைப் பட்டால்,  இன்னும் பக்குவமும் சரியான முதிர்ச்சியும் அடையவில்லை என்றே நினைக்கிறேன்...

* தூக்கி எறியப்படும் ஒன்று இன்னொருவருக்கு புதியதாகிறது அது பொருளானாலும் சரி மனசானாலும் சரி......!!

No comments: