Wednesday, December 26, 2018

சாதாரன ஆசிரியர் ஒருவரின் திறந்தமடல்...

அதிகம் படித்த அதிகாரிகளே ஜனநாயக நாட்டில் சர்வதிகாரம் பெற்ற கணவான்களே உங்களுக்கு சாதாரன ஆசிரியரின் திறந்தமடல் வணக்கம்...

அரையாண்டுத்தேர்வு முடிந்து விட்டது ஆனால் அரையாண்டிற்குள்ள பாடப்பகுதிகளை முடிக்க நேரம்தான் நீங்கள் தரவில்லை ஆனாலும் 100% தேர்ச்சி தந்திடவேண்டும் என்பது உங்கள் கட்டளை நாங்களும் தந்திடுவோம் பாவம் மாணவர்கள்...

பத்தாம் மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்புகளுக்கு டிசம்பர் மாதம் வரை நடத்த பாடத்திட்டம் தயார் செய்து தந்துவிட்டு அக்டோபர் மாதத்திலிருந்தே முழு போர்சன் தேர்வு நடத்தச் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்காக ஆசிரியர் வேகமாக பாடம் நடத்தினாலும்
தவறு. டீம் விசிட் என்று வைத்து அக்டோபர் மாதத்திற்கான போர்சனை ஏன் செப்டம்பரில் நடத்தினாய் என்று நடவடிக்கை எடுக்கிறீர்கள். முன்னே சென்றால் கடிக்கிறீர்கள் பின்னே சென்றால் உதைக்கிறீர்கள். ஆசிரியர்கள் என்ன செய்யமுடியும்.

படிக்கவும் பயிற்சி பெறவும் நேரம் தராமல் தேர்வு நடத்தி என்ன பயன்? ஆனாலும் 100 சதவீத தேர்ச்சி நாங்கள் தந்திடுவோம்...

100 சதவீத தேர்ச்சி அடைந்து எதை சாதிக்கப் போகிறீர்கள்? விதைப்பதெல்லாம் முளைத்துவிடுவதில்லை முளைத்ததெல்லாம் வளர்ந்துவிடுவதில்லை வளர்ந்ததெல்லாம்
காய்த்துவிடுவதில்லை இது அறிவியல் கருத்து.

100% வேலை செய்யும் இயந்திரம் கூட இதுவரை கண்டுபிடிக்கவில்லை ஐயா. பிறகு மனிதன் மட்டும் 100% சரியாக எப்படி வேலை செய்யமுடியும்.

பிறகு தனியார் பள்ளிகள் மட்டும் எப்படி 100% தருகிறார்கள் என்று கேட்கிறீர்கள் அங்கு ஆசிரியர்களைவிட பெற்றோர்களே கற்பிக்கிறார்கள். பின்தங்கிய மாணவனை 9ம் வகுப்பிலேயே வெளியேற்றி விடுகிறார்கள். அதனால்100% வருகிறது அப்படி ஒரு வாய்ப்பிருந்தால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆயிரம் சதவீதம் தேர்ச்சி தருவோம் இதெல்லாம் உங்களுக்கும் தெரியும்...

உங்களைப் பொருத்தவரை ஆசிரியர்களை திட்டவேண்டும் அதற்காகத்தான் தேர்வு நடத்துகிறீர்கள். ஆசிரியர்கள் உங்களைப்பார்த்து நடுங்க வேண்டும் அதற்காகத்தான் தேர்வு நடத்துகிறீர்கள். நாங்களும் அப்படியே நடந்து கொள்கிறோம். என்ன எதிர்கால சந்ததிதான் வீனாய் போகிறது என மனது வலிக்கிறது ஆனாலும் எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை பிரச்சனைகளை சொல்ல நீங்கள் அனுமதிப்பதில்லை ஏனென்றால் நிரந்தர அதிகாரம் பெற்றவர்கள் நீங்கள் ஆண்டிற்கு 3000மாணவர்கள் நீட்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக பத்து இலட்சம் மாணவர்கள் கஷ்டப்பட வேண்டுமா? அப்ப பொறியாளராக விஞ்ஞானியாக காவல்துறை அதிகாரியாக மாவட்ட ஆட்சியராக
ஏன் உங்களைப் போன்று கல்வித்துறை அதிகாரியாக வர விரும்பும் மாணவணின் நிலை என்ன? என்று கேட்க எனக்கும் ஆசைதான் ஆனாலும் அதிகாரம் படைத்த உங்களிடம் கேட்க இயலுமா ஜனநாயகத்திற்கு இழுக்கல்லவா அதனால் கேட்பதில்லை. எனக்கும் குடும்பம் உண்டு, வயிறும் உண்டு அதனால் கேட்க முடிவதில்லை.

பள்ளிக்கட்டிடத்தை இருக்குமிடத்திலிருந்து பத்து மீட்டர் நகர்த்தி வையுங்கள் என்று நீங்கள் சொன்னாலும் மறுப்பேதும் சொல்லாமல் செய்து முடித்து விடுகிறோம் அய்யா என்று பவ்வயமாக சொல்லிவிடுவோம் ஏனெனனறால் எங்களுக்கும் குடும்பம் உண்டு ஆசிரியர்களிடம் வேலை வாங்குகிறோம் என நினைத்து வருங்கால சந்ததியினரை பாழ்படுத்துகிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள் அல்லது உங்களுக்குச் சொல்லப்போவது யார்? அப்படியே சொன்னாலும் நீங்கள் கேட்கப் போவதில்லை ஏனென்றால் ஆசிரியர்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அறிவில்லாதவர்கள் அதுதான் உங்கள் மதிப்பீடு நீங்களோ எல்லாம் அறிந்தவர்கள். சர்வஅதிகாரம் படைத்தவர்கள். நீங்கள் இடும் கட்டளைகளை அப்படியே செய்துவிடுகிறோம். விளைவுக்கு நீங்கள் பொறுப்பல்ல அதற்கும் நாங்கள்தான் பொறுப்பு ஏன்னென்றால் ஊருக்கு இளைத்தவன் ஆசிரியன்...

எங்களுக்கும் வயிறு இருக்கிறது. அதனால் அந்தப்பலியையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்... வாழ்க ஜனநாயகம்...

No comments: