Wednesday, December 5, 2018

பெண்களே பாதுகாப்பாக வாட்ஸப் உபயோகியுங்கள்...

*பெண்களே உங்கள் வாட்ஸப் ஆபத்துகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்*

தெரிந்தவரோ  தெரியாதவரோ உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும் அவ்வளவுதான்

அவர்களால் உங்கள் வாட்ஸ்ஆப் பார்க்கவும் முடியும் அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும்.

உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் பார்க்க முடியும்.

போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து உங்களுக்கு மெசஜ் வந்தால் எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் கண்டுபிடிக்கமுடியாது

நீங்கள் ஏதேனும் வாட்ஸ்ஆப்' குரூப்களில்  இணைந்தால், உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவருக்கும் தெரியும்

பிரச்னைகளைத் தவிர்க்க, 'வாட்ஸ்ஆப்' செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும்.

அதாவது உங்கள் வாட்ஸப்பில் செட்டிங் சென்று அங்கு அக்கவுண்ட் கிளிக் செய்யுங்கள் அதில் பிரைவசி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், 'லாஸ்ட் ஸீன்' ஆகியவற்றை, மைகான்டாக்ட்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளலாம்.

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள்.

குரூப்களில் இணைவதிலும், அதில் செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்களை ப்ளாக்'ஆப்ஷனை பயன்படுத்தி,உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது.

மிகவும் முக்கிய குறிப்பு

உங்களுக்கு மிகவும் தெரிந்தவர்களோடு
மட்டும் வாட்ஸ்ஆப் பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.

*நன்றி*

No comments: