Monday, December 9, 2019

ஆவாரம் பூவின் மருத்துவ குணம்...

ஆவாரம் பூ/AVARAMPOO
தாவரவியல் பெயர்  சென்னா ஆரிகுலேட்டா /Senna auriculata குடும்பம் பேபேஸி.

”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா”

ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். மேலும் அந்தப் பூவை அப்படியே உண்ணலாமாம். ஆவாரம் பூ மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலமாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்று. தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும். ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறைகளில் மிக முக்கியமான உணவாகவும், கைவைத்திய மூலிகையாகவும் ஆவாரம் பூ இருந்து வருகிறது. இந்த ஆவாரம் பூவில் செனாபிக்ரின், கார்டியாக் குளுக்கோசைடு போன்ற வேதிபொருட்கள்  நிறைந்துள்ளதால் உடலிலுள்ள இன்சுலின்(Insulin) சுரக்கும் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் முற்றிலூமாக குணபடுத்தபடுகிறது.

ஆவாரம் பூ பயன்கள்/Benefits of Avaram Poo

ஆவாரைப் பஞ்சாங்கத்தை தினம் ஒரு மேஜைக்கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகிவர சர்க்கரை நோய், உடல் சோர்வு(Tiredness), நாவறட்சி(Tongue Dryness), அடங்காத தாகம்(Thirsty), தூக்கம் இன்மை, உடல் இளைத்தல், காந்தல் நீங்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் கற்றாழை நாற்றம் நீங்கும்.
உடல் பொன்நிறமாகும்(Glowing Skin). ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயிறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்.
உடல் சூட்டினால் (Body heat)அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும்.
ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய்(Diabetes) படிப்படியாக குடியும்.
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய்(Hemorrhoids) குணமடையும்.
ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை… என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை (Immune power) தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.                                                                                 ஆவாரம்பூ குடிநீர்: நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
மேலும் ஆவாரம்பூ சூப் ஆவாரம்பூ டீ போன்றவையும் தயாரித்து பருகலாம்.

No comments: