Sunday, January 27, 2019

நிஜம் : செப்டம்பர் ஐந்து 2030...

செப்டம்பர் ஐந்து 2030 ஆசிரியர் தினம்... இப்படி தான் இருக்குமா? படித்ததில் பிடித்தது

செப்டம்பர் ஐந்து இரண்டாயிரத்து முப்பது ஆசிரியர் தினம்...

இதயத்தை இடியாய் பிளக்கும் இன்றைய முக்கியச்செய்திகள்.

தேர்ச்சி விழுக்காடு குறைந்ததால் மனமுடைந்த ஆசிரியர் தற்கொலை.

பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் வீடு திரும்பவில்லை மாணவர்கள் கேலி செய்ததால்  மனமுடைந்தார், மருத்துவமனையில் அனுமதி.

கணவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்ததால் வெறுத்துப்போன மனைவி விவாகரத்து.

மணமகன் ஆசிரியர் என்று தெரிந்ததும் மணமகள் ஓட்டம்.

ஆசிரியப்பணியை ஏற்க மறுத்த இளைஞன் கைது.

குடும்பத்தில் ஒருவர் ஆசிரியர் பணி ஏற்க வேண்டும் அரசு அதிரடி உத்தரவு.

பள்ளிக்கு வர மறுத்த ஆசிரியர் தலைமறைவு போலீஸ் வலைவீச்சு.

மது அருந்தாமல் பள்ளிக்கு வந்த மாணவனுக்கு பாராட்டு விழா.

மாணவன் கத்தியால் குத்த வரும்போது ஒதுங்காமல் விட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்.

இனி வகுப்பறையில் தலைக்கவசம் அணிவது ஆசிரியர்களுக்கு கட்டாயம்.

ஆசியருக்கு வணக்கம் வைத்த மாணவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆசிரியர் வீட்டில் வருமான வரி சோதனை ஏராளமான கடன் வாங்கிய ஆவணங்கள் பறிமுதல்.

ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை வீசிச்சென்ற மர்ம நபர்கள் காவல்துறை விசாரணை.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தனது ஆசிரியருக்கு கூலி வேலை கொடுத்த மாணவனுக்கு குவியும் பாராட்டு.

இரவு பகல் எந்நேரமும் எமிஸ் எமிஸ் என்று புலம்பிய கணவனை கண்டித்த மனைவிக்கு
விருது.

நான்கு  கொலைகள் நடுங்காமல் செய்த கொலையாளிக்கு "அருகில் உள்ள அரசுப்பள்ளியில் அய்ந்தாண்டுகள் ஆசிரியராக பணி புரிய வேண்டும்" நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

மரண தண்டனை  கேட்டு கொலையாளி மேல் முறையீடு செய்துள்ளார்.

No comments: