Saturday, November 18, 2017

கணித ஆத்திச்சூடி

அணியே இயற்கணிதத்தின் அணிகலனாம்.
If Algebra is a beauty, matrices beautify the beauty.
ஆரமென்பது விட்டத்தில் பாதியாம்.
Radius = diameter/2.
இயற்கணிதமே அறி-பொறி இயலினோர் அடிப்படையாம்.
Algebra is one of the basic concepts in science and engineering.
ஈவும் மீதியும் வகுத்தலின் ஈருறுப்பே.
Quotient and remainder are part of division.
உருளையும் உருண்டையும் கூம்பும் வடிவவியலின் அங்கம்.
Cylinder, Sphere and Cone are part of Geometry.
ஊர்ந்து ஊர்ந்து முடிவிலி நோக்கிச் செல்லும் இசைத்தொடரே.
Harmonic series diverges very slowly.
எண்ணமுடியா எண்ணிலடங்கா மெய்யெண்களே.
Uncountable Real numbers.
ஏற்றத்திற்கே ஏற்றம் தரும் அடுக்கேற்றமே.
Exponential growth.
ஐதணியில் பல உறுப்புகள் சுழிகளே.
Sparse matrix has more zero elements.
ஒற்றைப்படை எண்கள் மிகுந்துவரும் பகா எண்களே.
All prime numbers are odd (except 2).
ஓர் குலத்திற்கு ஒன்றேயாம் ஒற்றொருமை.
Every group has exactly one identity.
ஔசீரத்தில் வீற்றிருந்து உலகாளும் அறிவியலின் ராணியே!
Mathematics is the queen of science.


No comments: