Thursday, January 17, 2019

உலகின் முன்னணி பிராண்டுகள் பெயர் வந்த கதை !!

🌟 அசென்செர் (Accenture) :

ஆண்டெர்சன் கன்சல்டிங் என்ற நிறுவனம் தனது பெயரை மாற்ற நினைத்தபோது, அது குறித்து தனது நிறுவன ஊழியர்களிடமே கேட்டது. நார்வே நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் ′accent on the future′ என்று அவர் சொல்ல, அதையே கொஞ்சம் சுருக்கி ′accenture′ என்று மாற்றினார்கள்.

🌟 அடிடாஸ் (Adidas) :

1924-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அடோல்ப் டோஸ்ளர் (Adolf Dossler) என்பவர் தனது பெயரின் முதல் இரு பாதியை வைத்து உருவாக்கியதுதான் இந்த பெயர்.

🌟 சிஸ்கோ (Cisco) :

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகருடைய பெயரின் இறுதி பகுதியில் இருந்து உருவானதுதான் சிஸ்கோ. சிஸ்கோ சிஸ்டம்ஸ் லியோனார்டு போசாக் மூலம் டிசம்பர் 1984-இல் நிறுவப்பட்டது.

🌟 இன்போசிஸ் (Infosys) :

Information systems இதை சுருக்கிதான் உலக ஐ.டி துறையில் முன்னணியில் இருக்கும் இந்திய நிறுவனமான இன்போசிஸ்-க்கு பெயர் வைத்தார்கள். இன்போசிஸ் நிறுவனம் 1981 -இல் புனேயில் என்.ஆர்.நாராயணமூர்த்தி மற்றும் ஆறு நண்பர்களால் நிறுவப்பெற்றது.

🌟 மேகி (Maggi) :

நூடுல்ஸ் என்றாலே மேகி என்றால்தான் குழந்தைகளுக்கு தெரியும். அந்த அளவுக்கு இந்த பெயர் பிரபலம். 1947-ஆம் ஆண்டு நெஸ்லே (nestle) நிறுவனம் ஜூலியஸ் மேகி என்பவர் ஆரம்பித்த நிறுவனம். அவருடைய பெயரின் கடைசி பாதியை தனது நிறுவன பொருட்களின் ஒன்றான நூடுல்ஸ்-க்கு மேகி என்று பெயர் வைத்துக்கொண்டார்.

🌟 வோடஃபோன் (Vodafone) :

வாய்ஸ் டேட்டா டெலிபோன் (Voice Data Telephone) என்பதன் சுருக்கமே இந்த பெயர். தனது முதல் மொபைல் அழைப்பை இங்கிலாந்து நாட்டில் 1985 - ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் ஆரம்பித்தது.

🌟 விப்ரோ (Wipro) :

வெஸ்டர்ன் இந்தியன் பாம் ரீபைன்ட்டு ஆயில் லிமிடெட் (Western India Palm Refined Oil Ltd) என்பதன் சுருக்கமே WIPRO, இந்நிறுவனம் 1980 - இல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் தயார் செய்த பொருள் வனஸ்பதி. ஆனால் இன்றோ இது சாப்ட்வேர் (Software) உலகில் முன்னணி நிறுவனம்.

🌟 அமுல் ( AMUL )

இந்தியாவில் பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தியில் ரெக்கைகட்டி பறக்கும் குஜராத் நிறுவனமான அமுல் ( AMUL )
Anand Milk Union Limited என்ற சொற்களின் முதல் வார்த்தைகளைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.

மேற்கண்ட தொகுப்பில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள்

ஊழியர் -  Employee
உரிமையாளர் -  Owner
பிரபலம் -  Popular
சுருக்கம் -  Brief
முன்னணி நிறுவனம் - Leading Company

No comments: