Sunday, January 27, 2019

உலகின் மூத்தகுடி - தமிழ் மக்கள்

நீராதாரத்தினை போற்றிப் பேணிக் காத்ததில் நம் முன்னோர்களே முன்னோடிகள்.

தன் வாழ் நாள் முழுவதும் ஏரிகளை கட்டுவதையே கடமையாக கொண்டவன் இரும்பைகுடி கிழவன் ( கி.பி. 2ம் நூற்றாண்டு ) என்ற ஓர் சிற்றரசன்... *இருஞ்சோ நாடு* ( சாத்தூர்,விளாத்திகுளம் ) பகுதிப்
குறிப்பாக ஏரிகளை அமைத்து அந்த ஊர்பெயர்களிலெல்லாம் ஏரி என்றிருக்கும் படி பெயர் வைத்தான்.
*நடையன் ஏரி, மாறன் ஏரி*

ஒரு அரசன் வரலாற்றில் நிற்க வேண்டுமெனில் அவன் நீர்நிலைகளை உறுவாக்கி பேணிக்காத்திட வேண்டும்...அவனே வரலாற்றில் இடம் பெருவான்.
புலவர் குடப்புலவியனார்
- புறநானூறு

நின்றால் கால்கள் உள்ளுக்குள் புதையும் கடற்கரை மணல் பாங்கில் அமைந்த கல்லணை ஆற்றுப்படுகையில் தன் மதி நுட்ப அறிவினை செலுத்திய கரிகாலன்...
கல் மேல் கல் வைத்து வைத்து கட்டிய தொழில் நுட்பம் இன்று உலக அரங்கில் போற்றப் படுகிறது...
இன்னும் பயன்பாட்டில் இருக்ககூடிய ஒரே பழைய அணை கல்லணை யை
*The Grand Anicut* என்று சொன்னாற்
Sir Arthur Thomas Cotton.

முற்காலச் சோழன் கரிகாலனை தொடர்ந்து பிற்கால சோழ மன்னர்கள் 13 வகையான கட்டுமானங்கள் காவேரியின் நீர்நிலைகளை மேம்படுத்தி *சோழநாடு சோருடைத்து* என்பது பழமொழி
"மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என
யானை கட்டி போரடித்த" - என்ற சொல்லுக்கு விவசாயத்தின் புகழ் உச்சிக்கு சென்றார்கள் சோழர்கள் .

இன்னும் பல மதி நுட்பமான நீர்மேலான்மைகள் நம் முன்னோர்கள் செய்து வைத்துள்ளனர்...
பெய்யும் வான்மழையை தேக்கி அதனை பயன்பாட்டுக்கும்,விவசாயத்திற்கும் செவ்வனே வடிவமைத்து வைத்த ஏரிப்பாசனத்தை புகழ்ந்து பாராட்டி தனது நூலில் உலக நாடுகள் அனைத்தும் இந்த பழமையான *ஏரி நீர் தொழில் நுட்பத்தை* பின் பற்றுங்கள் என *Last Oasis* நூலில் குறிப்பிட்டிருந்தார் ஆய்வாளர் Sandra Postal - World Research Institute

ஆனால் தமிழ் நாட்டில் உள்ள நமது நவீன சிந்தனை கொண்ட அரசியல் மற்றும் ஆட்சியாளர்கள் இப்படி முன்னோர்கள் கட்டி காத்த நீர்நிலைகளை எப்படி பராமரித்தார்கள் என்று ஊருக்கே தெரியும்..

நாகர்கோவில் தொடங்கி சென்னை வரையில் இருக்கும் அத்துனை பேருந்து நிலையங்கள் ஏரிக்குள் கட்டப்பட்டது, நீர்நிலைகளுக்கு கட்டிடங்கள் கட்ட தடைவிதித்த உயர்நீதி மன்றம் கட்டப்பட்டதும் ஏரிக்குள்ளேதான்... *ஏரி ஸ்கீம்* என்று பெயர் வைத்தே குடியிருப்பு பகுதிகளை குடி அமர்த்தினார்கள்...

இனியாவது உலகமே போற்றும் தமிழனின் *ஏரி பாசன* தொழில்நுட்பத்தை  மதித்து நடக்குமாறு நவீன சிந்தனை கொண்ட அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள்
சிந்திக்க,செயல்படுக

🙏நன்றி🙏
தமிழ் மக்கள்

No comments: