Tuesday, January 8, 2019

சிந்தனைக்கு சில வரிகள்...

எது தான தர்மம்? உனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையில் நீ எல்லாவிதத்திலும் நேர்மையை கடைபிடித்தால் அது தர்மம். அதே நேர்மையை உன்னைபார்த்து பலர் கடைபிடித்தால் அது நீ செய்த தானம்...

எங்கோ... எப்போதோ... நேர்ந்த ஓர் ஏமாற்றம் வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து வாழ்க்கையை நரகமாக்கி கொண்டே இருக்கும்...!

கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை... கல் தான் காணாமல் போய்விடுகின்றது, பரந்த மனதுடன் இரு உன்னை விமர்சிப்பவர்கள் அதில் காணாமல் போய் விடுவார்கள்...

வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள்... வீழ்ந்து தாழ்ந்து விட்டால்
கேவலமாக பேசுவார்கள்... சில_நேரங்களில்_சில_மனிதர்கள்...

*சிரித்து கொண்டே கடந்து விட வேண்டும் என்ற ஆசையை தவிர* *வேறொரு நினைப்பும் இல்லை இந்த வாழ்க்கையைப் பற்றி...!!!

எத்தனை...பூஜைகள் செய்தாலும்
எத்தனை...தானங்கள் செய்தாலும்
அதன் பலன்கள்...உனக்கு கிடைக்க
உன்னால் பாதிக்கப்பட்டவர்கள்
உன்னை வாழ்த்த வேண்டும்

"உனக்கான வாழ்க்கையும் வழியையும்"
     உன்னால் அமைத்து கொள்வதே 
உன் வாழ்நாள் முழுவதும் வெற்றி'தரும்
  
நெருக்கமானவர்களிடம் நாம்
நம்பிச் சொன்ன வார்த்தைகளை,
மூன்றாம் ஒருவரின் வாயால்
கேட்கையில்...
அவமானப்படுகிறது நம்
#நம்பிக்கை...

மனப்பக்குவம் என்பது
நிதானத்தை குறிக்கின்றது...
நிதானம் என்பது
சலனமில்லாத அமைதியை குறிக்கின்றது... சலனமில்லாத அமைதி என்பது
ஆன்மாவில் நிலைத்திருப்பது...
ஆன்ம நிலையில் நிலைத்திருப்பது தான் மனப்பக்குவத்தின் அடையாளம்.

No comments: