Sunday, February 3, 2019

கீரைகளும் அதனை சாப்பிடும் காலங்களும்...

கோடைக் காலதில் உண்ண வேண்டிய கீரைகள்:

வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, பசலைக் கீரை, கீழா நெல்லிக் கீரை,  கரிசலாங்கண்ணிக்கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக்கீரை, இவற்றைக் கூடியவரை பிப்ரவரி முதல் ஆகஸ்ட்  வரை சாப்பிடலாம்.

குளிகாலத்தில், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய கீரைகள்:

தூதுவளைக்கீரை, புதினாக் கீரை, முசுமுசுக்கை கீரை, அரைக் கீரை, மூக்கிரட்டைக்  கீரை, சுக்காங்கீரை, இவற்றைப் புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது. 

எல்லாக் காலங்களிலும் சாப்பிடக் கூடிய கீரைகள்:

முருங்கைக் கீரை, புளிச்சக் கீரை, அரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வல்லாரைக்  கீரை, ஆண்டு முழுதும் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கும் ஏற்ற கீரைகள்:

மூக்கிரட்டை, முருங்கை, வல்லாரை, அரைக்கீரை, கற்பூரவல்லி, தூதுவளை இவற்ரை கேரட்,  துவரம் பருப்புடன் நெய், உருளைக் கிழங்கு சேர்த்து சமைத்து உண்ணக் கொடுக்கலாம்.

நரம்பு மண்டலத்துக்கு :

நரம்பு மண்டலத்துக்கு ஏற்ற கீரைகள்: பொன்னாங்கன்னி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவை பலன்  தரும்.

தோலுக்கு :

பருப்புக் கீரையும், சுக்காங்கீரையும் நல்ல மினுமினுப்பை தரும்.

மூட்டுக்களுக்கு :

கறிவேப்பிலை, முடக்கத்தான், சண்டிக் கீரை. இந்த வைகை கீரைகள் அன்றாடம் உணவில் சேர்த்தால் மூட்டு சம்பந்தப் பட்ட  பிரச்சனைகள் குண்மாகும்.

இல்லற வாழ்வு சிறக்க:

முருங்கைக் கீரை, அவரைக் கீரை, பசலைக் கீரை, தூதுவளைக் கீரை, புளிச்சக் கீரை, வல்லாரைக் கீரையாகும்.

No comments: