ஒரு பெரிய பணக்காரனுக்கு பணத்தோடு, அதிகாரமும் இருந்தது. ஆனால் அவனுக்கு அனைத்தின் மீதும் இருந்த பற்று குறைந்து கொண்டே வந்தது.
அவனது மனம் தத்துவ சிந்தனைகளை நாடியது. அதனால் தனது சிந்தனையை வளர்க்க எங்கு படிப்பது, யாரிடம் படிப்பது என்று நிறைய பேரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அப்போது பலரும் ஒரு ஜென் துறவியைப் பற்றி சொன்னார்கள். அதனால் அவனும் அவரிடம் தனது அறிவை வளர்க்க சென்றான்.
அந்த துறவியின் காலில் விழுந்து,
நமது "ஐயா! எனக்கு ஜென் தத்துவத்தைப் பற்றி தெளிவாக சொல்லுங்கள் என்று கேட்டான்.
அதற்கு அந்த துறவியும்.,
"ஜென் தத்துவம் என்றால்..." என்று சொல்லி, உடனே அவனிடம் "நீ போய் சிறுநீர் கழித்துவிட்டு வா!" என்று கூறினார்.
அவனோ மனதில் "என்ன இவர் இப்படி சொல்கிறார், எனக்கு வந்தால் நான் போகமாட்டேனா? கொஞ்சம் கூட அறிவில்லாதவர் போல் சொல்கிறார்" என்று மனதில் புலம்பிக் கொண்டே, போய்விட்டு வந்தார்
அப்போது அந்த துறவி அவனிடம்.,
"புரிந்ததா...?" என்று கேட்டார். அதற்கு அவன், "இதில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது?" என்று கேட்டான்.
அவர் அதற்கு "எவ்வளவு பெரிய பணக்காரனாக அல்லது அரசனாக இருந்தாலும் தன்னிடம் வேலை செய்பவனிடமோ, இல்லை..
ஏழையிடமோ அல்லது எத்தகைய மனிதனாக இருந்தாலும், இப்போது நீ செய்த வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும்.
மேலும் எவ்வளவு சிறிய வேலையாக இருந்தாலும் அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும்.
அதிலும் அடுத்தவர் வேலையைத் தடுக்காமலும் இருக்க வேண்டும் " என்று சொன்னார்.
அதைக் கேட்ட அவன் வாயடைத்துப்போய் விட்டான்.
ஆம்.,நண்பர்களே..,
நமக்கு விருப்பமான ஒரு செயலில், அல்லது துறையில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வது மிக முக்கியமானது. இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது அர்ப்பணிப்பு... ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக பணியாற்று என்பதும், அப்படி பணியாற்றும் நேரத்தில் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதென்பதும் உங்களை மெருகேற்றும்.
மேலும்.,
நமது பணியை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்ற கவலை நமக்கு வேண்டாம்; (The size of our audience doesn't matter; let us continue our work.)
நமக்குண்டான பணியை அர்பணிப்பு உணர்வுடன் செய்வோம் வாழ்க்கையில் வெற்றி அடைவோம்...
No comments:
Post a Comment