வையத்துள் சிறந்தோர் உண்டெனில் அவர் மகளிர் என்றே கைகொட்டுவோம்
மகளிர் இல்லா உலகம் ஒரு காற்றில்லா பூமியென்றே பெயர் மாற்றுவோம்
பெண்களை நதியாக நிலமாக மலராக ஒளியாக உருவகப்படுத்தி மகிழ்ந்திடுவோம்
மகளாக மனங்களில் ஊஞ்சலாடிய எண்ணங்களையும் வண்ணங்களையும் சிந்தையில் நிறைத்திடுவோம்
தாயாக உருக்கொடுத்து வலுக்கொடுத்து வாழ்வுகொடுத்த அந்த தெய்வங்களை வணங்கிடுவோம்
சகோதரியாக உணவிலும் உணர்விலும் களிப்பிலும் களைப்பிலும் பங்கேற்ற பாசங்களை மதித்திடுவோம்
மனைவியாக துணைவியாக மனையை மக்களை மனதை உடலுள்ள நலத்தை பேணி காத்திடும் அந்த தாயுள்ளங்களை நேசித்திடுவோம்
ஆசானாக மேய்ப்பனாக நமை உருவாக்கிய புலம் காட்டிய மேன்மை மிகு மாதரை என்றும் நினைத்திடுவோம்
கொஞ்சி விளையாடியும் அருகில் தங்கி களிப்பூட்டிய அருமை பாட்டி அத்தையரை மகிழ்வோடு கண்டு உறவாடுவோம்
மனம் விட்டு தனை மறந்து மன பளு குறைத்து அளவளாவிய தோழியரை சகோதர வாஞ்சையோடு மனதார வாழ்த்திடுவோம்
இம் மகளிரை என்றென்றும் போற்றிடுவோம்
இம் மகளிரை மேன்மை மிகு மனிதமாக மதித்திடுவோம்.
*இனிய மகளிர் தின விழா நல்வாழ்த்துகள்...*
சகோதர அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை திருத்தலம்
No comments:
Post a Comment