போலந்து நாட்டின் மதிப்புமிக்க தியாகியாகவும் தேசபக்தராகவும் கருதப்படுபவர் கோஸ்ஸியஸ்கோ என்பவர்.
இவர் அந்நாட்டின் ஜெனரலாக இருந்தபோது முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லிவர, வேறு எந்தக் குதிரையும் இல்லாததால், தனது குதிரையைக் கொடுத்து ஒரு வீரனை அனுப்பி வைத்தார். அந்த வீரன் ஜெனரலின் குதிரையில் சென்று செய்தியைச் சொல்லிவிட்டு வந்தான்.
அவன் குதிரையைவிட்டு இறங்கி அதை கோஸ்ஸியஸ்கோவிடம் ஒப்படைக்கும்போது, “அடுத்த முறை எனக்கு வேறொரு குதிரையைக் கொடுங்கள்” என்றான். அவர் அதற்கான காரணத்தைக் கேட்டபோது அவன், “செல்லும்வழியில், எங்கெல்லாம் ஏழைகள் வீடு இருந்தததோ, அங்கெல்லாம் இக்குதிரை நின்றுவிட்டது; பிச்சைக்காரரர்களைக் கண்டாலும் அப்படியேதான் செய்தது.
இதனால் நீங்கள் சொல்லி அனுப்பிய செய்தியை சொல்லிவிட்டு, உடனடியாக என்னால் திரும்பிவர முடியவில்லை” என்றான். அந்தளவுக்கு கோஸ்ஸியஸ்கோ தன் குதிரையை ஏழை எளியவரைக் கண்டு இரங்கும் அளவுக்கு வளர்த்திருந்தார்.
ஏழை எளியவரைக் கண்டு இரங்கவேண்டும் என்று ஒரு குதிரைக்கு இருக்கும் உணர்வு, ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு காரியம்.
No comments:
Post a Comment