Saturday, April 13, 2019

சிந்திக்க சில வரிகள்...

ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசிக் கணம் என்பதைப் போல வாழுங்கள்.
யாருக்கும் தெரியாது. இதுவே கடைசியாகவும் இருக்கலாம்...

எல்லோரும் எல்லோராலும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாகத்தான், வாழ்க்கையை துவங்குகிறோம்,
ஆனால் வெறும் ஆசீர்வாதத்தில் இல்லையே வாழ்க்கை*

*அவரவர் அறிவினால்தான் இயங்குகிறது*  வாழ்க்கை...
அதை அனுபவிப்பவது அவரவர் கையில்...

வரலாற்றில், வெற்றிப் பெற்றவனும் இடம் பெற முடியும்; தோல்வி அடைந்தவனும் இடம் பெற முடியும்...
ஆனால், வேடிக்கை பார்ப்பவனால் ஒரு போதும் இடம்பெற முடியாது...!!!

ஒருவன் துன்பப்படும் போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு.

பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், சற்றே பொறுமை காத்தால் தற்காலிகமாக நிம்மதி கிடைக்கும்.

வறட்டு கௌரவத்திற்காக நிம்மதியை இழப்பவர்கள் தான் இங்கு அதிகம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு அதிசயமே அதைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக அனுபவிக்க வேண்டும்.

உங்கள் நற்செயல்கள் கண்களுக்குத் தெரியாது, ஆனால் அவை பிறரின் இதயங்களைச் சென்று சேரும்.

நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில் நீ புகழப்படும் இடங்களில் அடக்கமாய் நில்
நீ விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு..

No comments: