வயது ஆகிறது என சொல்லி எதையாவது நிறுத்துவது அல்லது குறைப்பது உங்களுக்கு நீங்களே விதித்துக்கொள்ளும் மரணதண்டனைக்கு சமம்.
வயதை ஆண்டுகளால் அளக்கவேண்டாம்.
👉ஒரு மைலை எத்தனை தூரத்தில் ஓடிக்கடக்க முடிகிறது?
👉 எத்தனை புல் அப்ஸ் எடுக்க முடிகிறது?
இதை வைத்து அளவிடுங்கள்.
இந்த வயதில் இத்தனை ஆக்டிவாக 🤸♂️ இருக்கிறார் என உங்களை விட வயதில் பாதி உள்ள இளைஞர்களுக்கு உங்களை கண்டால் மனதில் ஒரு குற்ற உணர்வு வரவேண்டும். உங்களை தாண்டி செல்ல அவர்கள் முயலவேண்டும்.
இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே இப்படி ஒரு ஆரோக்கியமான போட்டி சமூகத்தில் நிலவவேண்டும்.
"என் அப்பா தன் 60 வயதில் ஒரு மைலை எட்டு நிமிடத்தில் ஓடினார்" என்பது உங்கள் மகனின்/மகளின் 60 வயதில் அவருக்கு நினைவுக்கு வரவேண்டும். அப்போதுதான் அவர் தன் 60வது வயதிலும் ஓடி நல்ல உடல்நிலையுடன் இருப்பார். அவரை பார்த்து அவரது பேரகுழந்தைகளும் கற்பார்கள். உங்கள் தலைமுறையே நீங்கள் இடும் இந்த நல்ல விதையால் செழிக்கும்.
டெண்டுல்கர் மகன் கிரிக்கட் ஆடுகிறான். சிவாஜியின் பேரனும் திரைப்படத்தில் நடிக்கிறார் .நல்ல பழக்கங்கள் தலைமுறையை தாண்டி ஆதிக்கம் செலுத்தும், கெட்ட வழக்கங்களும் அவ்வாறே.
"It takes a village to raise a kid" என்பது ஆங்கில பழமொழி.
உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அண்டை அயல், உறவில் உள்ள பிள்ளைகளுக்கும் ஆதர்சமாக இருங்கள்.
உடல் உழைப்பில், உயர்வில், உடல் வலுவில், நல்ல பழக்க,வழக்கங்களில், தலைமை பண்பில் சிறந்தவராக இருங்கள். உங்களை பார்த்து காப்பி அடித்து அவர்களும் அம்மாதிரி ஆக முயல்வார்கள்.
Habits are contagious, both good and bad habits.
No comments:
Post a Comment